1. Home
  2. எவர்கிரீன்

ஓவர் தலைகனத்துடன் நடந்து கொண்ட பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகை.. மனைவியின் தாலியை அடமானம் வைத்த தயாரிப்பாளர்

ஓவர் தலைகனத்துடன் நடந்து கொண்ட பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகை.. மனைவியின் தாலியை அடமானம் வைத்த தயாரிப்பாளர்
என்னதான் படத்தில் வீர வசனம் பேசினாலும் நிஜத்தில் இப்படி ஒரு குணத்துடன் அவர் இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாக இருக்கிறது.

பொதுவாக நடிகைகள் என்றாலே கொஞ்சம் திமிருடன் நடந்து கொள்வது சகஜம் தான். ஆனால் தனக்கு சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளரையே சுத்தலில் விடுவது கண்டிக்கத்தக்கது. ஏனென்றால் அந்த காலத்தில் சிவாஜி போன்ற பெரிய நடிகர்களே சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார்களாம். அப்படி இருக்கும் போது 80 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை தயாரிப்பாளரை படாதபாடு படுத்தி இருக்கிறார்.

இதனால் அந்த தயாரிப்பாளர் தன் மனைவியின் தாலியையே அடகு வைக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார் இப்படி ஒரு தலை கனத்துடன் நடந்து கொண்ட அந்த நடிகை வேறு யாரும் அல்ல இரண்டாம் சாவித்திரி என்று புகழப்படும் சரிதா தான். இயக்குனர் கே பாலச்சந்தரின் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவையே ஒரு காலத்தில் தன் கட்டுக்குள் வைத்திருந்தார். எதார்த்தம் கலந்த தைரியமான நடிப்புதான் இவருடைய பலமாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் ஹீரோயின் என்றாலே கலராக இருப்பார்கள் என்ற ஒரு பிம்பத்தை உடைத்து காட்டியதும் இந்த கருப்பழகி தான். அப்படிப்பட்ட இவருக்கு அந்த காலத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். நடிப்பு மட்டுமின்றி பின்னணி குரல் கொடுப்பது என பிசியாக இருந்த இவர் நடிகர் தியாகராஜனுடன் இணைந்து மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்த திரைப்படம் இப்போதும் கூட அவர் பெருமையை சொல்லும்.

ஆனால் அந்தப் படத்தின் போது இவர் தயாரிப்பாளருக்கு கொடுத்த டார்ச்சர் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது அந்த படத்தை அழகன் தமிழ்மணி மற்றும் சிலர் இணைந்து தயாரித்துள்ளனர். சிறு பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் அனைவரும் சிறுக சிறுக பணம் சேர்த்து இருக்கின்றனர். அதன் பிறகு அப்போது பிரபலமாக இருந்த சரிதா அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை கமிட் செய்திருக்கிறார்கள்.

பின்னர் திருப்பதியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்த பட குழு சரிதாவுக்காக காத்திருந்தார்களாம். ஆனால் அவர் முன்பணம் கொடுக்காத ஒரே காரணத்திற்காக வர மறுத்திருக்கிறார். எவ்வளவு சமாதானம் படுத்தியும் கேட்காத அவருக்காக தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி தன் மனைவியின் தாலியை அடமானம் வைத்திருக்கிறார்.

ஒரு மஞ்சள் கயிற்றை தன் மனைவியின் கழுத்தில் கட்டிவிட்டு தங்கத் தாலியை அடகு வைத்த தயாரிப்பாளர் அந்த பணத்தை சரிதாவுக்கு கொடுத்து பிளைட்டில் டிக்கெட்டும் போட்டு படப்பிடிப்பு தளத்துக்கு வர வைத்திருக்கிறார். மேலும் தங்கள் கஷ்டத்தையும் தயாரிப்பாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதற்கு சரிதா அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை, என்னிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று தலைகனத்துடன் பதில் கொடுத்தாராம். என்னதான் படத்தில் வீர வசனம் பேசினாலும் நிஜத்தில் இப்படி ஒரு குணத்துடன் அவர் இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாக இருக்கிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.