1. Home
  2. எவர்கிரீன்

குழந்தைகளுக்காக ஒன்று சேர்ந்து பயணிக்கும் 5 விவாகரத்தான நட்சத்திரங்கள்.. மிரள வைத்த தனுஷ்-ஐஸ்வர்யா

குழந்தைகளுக்காக ஒன்று சேர்ந்து பயணிக்கும் 5 விவாகரத்தான நட்சத்திரங்கள்.. மிரள வைத்த தனுஷ்-ஐஸ்வர்யா

Dhanush: திருமணமான தம்பதிகளிடையே கப்பல் கோல்ஸ் (Couple goals) கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விவாகரத்தான தம்பதிகளிடையே நடக்கும் கப்பல் கோல்ஸ் (Couple goals) பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அதை செய்வதற்கும் தமிழ் சினிமாவில் நட்சத்திரங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இனி இவருடன் வாழவே முடியாது என விவாகரத்து வாங்கிவிட்டு, பின்னர் பிள்ளைகளுக்காக ஒன்றாக பயணிக்கும் நட்சத்திர தம்பதிகளை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒன்று சேர்ந்து பயணிக்கும் 5 விவாகரத்தான நட்சத்திரங்கள்

தனுஷ்-ஐஸ்வர்யா: எந்த ஒரு சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் தங்களுடைய 16 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. இந்த விவாகரத்து வழக்கில் தனுஷ் மீது எத்தனையோ குற்றங்கள் பேசப்பட்டது.

ஆனால் கடைசி நிமிடம் வரை ஐஸ்வர்யா இது குறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. மேலும் தங்களுடைய பிள்ளைகளின் பள்ளிகளில் நடக்கும் முக்கியமான விழாக்கள் எல்லாவற்றிற்கும் பெற்றோர்களாக இருவரும் போகிறார்கள்.

சமீபத்தில் இவர்களின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் இருவரும் கலந்து கொண்டது பெரிய அளவில் வைரல் ஆனது.

ஜிவி பிரகாஷ்-சைந்தவி: ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினர் பள்ளி பருவத்தில் இருந்தே காதலில் இருந்தவர்கள். இவர்களுடைய விவாகரத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்த ஒன்று.

அதைத் தாண்டி ஆச்சரியமாக இருப்பது இருவரும் பெற்றோர்களாகவும் சரி தங்களுடைய துறைகளிலும் சரி நேர்த்தியாக நடந்து கொள்வதுதான்.

ஜிவி பிரகாஷின் இசையில் சைந்தவி பாடுவது, குழந்தை இருவரிடமே இருப்பது என ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ்-லலிதா: நடிகர் பிரகாஷ் ராஜ் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றுவிட்டு பிரகாஷ்ராஜ் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருந்தபோதிலும் இன்றுவரை பிள்ளைகளுக்காக இவர்கள் இருவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள்.

பிரபுதேவா-ரமலத்: பிரபுதேவா அவருடைய முன்னாள் மனைவி ரமலத்தை பிரியும் பொழுது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றின் ரமலத் இருவரும் குழந்தைகளுக்காக இன்று வரை நல்ல நட்புடன் பேசி வருவதாக சொல்லி இருக்கிறார்.

பிரபுதேவாவுக்கு இரண்டாம் திருமணம் நடந்து பெண் குழந்தை இருக்கும் நிலையில் தன்னுடைய மகன்களின் வாழ்க்கை குறித்த எந்த ஒரு முடிவையும் பிரபுதேவா மற்றும் ரமலத் இணைந்தே எடுக்கிறார்கள் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

சரத்குமார்-சாயா தேவி: நடிகை ராதிகாவுடன் ஆன திருமணத்திற்குப் பிறகு சரத்குமார் தன்னுடைய முதல் மனைவி மற்றும் பிள்ளைகளை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் தான் இருந்தார். அதன் பின்னர் இரண்டு குடும்பங்களும் சமூகமாக அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த வரலட்சுமி திருமணத்தை சரத்குமார், ராதிகா மற்றும் சாயாதேவி முன் நின்று நடத்தியது பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா ராதிகாவின் ரேடான் கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.