சீரியஸான கேரக்டரிலும் நடித்த சார்லியின் 5 படங்கள்.. ரீ என்டரிக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ்

80, 90களில் காமெடியாக நடித்து வந்த சார்லி இப்பொழுது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் மற்றும் சீரியஸான கேரக்டரிலும் நடித்து வருகிறார். இவருக்கு அந்த கேரக்டர் எப்படி பொருத்தமாக இருந்ததோ அதே மாதிரி இப்போ உள்ள கதாபாத்திரத்தையும் மிகவும் கச்சிதமாக செய்து வருகிறார். இதனாலையே இயக்குனர்கள் குணச்சித்திர கேரக்டருக்கு இவரை தேடி வருகிறார்கள். இவர் அப்படி சீரியஸான படங்களில் நடித்ததை பற்றி பார்க்கலாம்.

தளபதி: மணிரத்தினம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தளபதி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா மற்றும் சார்லி நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டியின் நட்பை அழகாக எடுத்து சொல்லும் படமாக அமைந்திருக்கும். இதில் ரஜினிக்கு நண்பராக சார்லி நடித்து இருப்பார். மேலும் இந்த படத்தின் மூலம் தான் காமெடி பண்ணாமல் குணச்சித்திரமாக நடித்த முதல் படம்.

வேலைக்காரன்: மோகன் ராஜா இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வேலைக்காரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், ஃபகத் பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ் மற்றும் சார்லி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பொறுப்புள்ள அப்பாவாக நடித்தார். இதில் அவர் வழக்கமாக செய்யும் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல்களை வாங்கி இருப்பார்.

மெய்: எஸ்.ஏ பாஸ்கரன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு மெய் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சார்லி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் இந்தியாவில் நடக்கும் மருத்துவ மாஃபியாக்கள் தொடர்பான உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இதில் சார்லி, நர்மதாவின் தந்தையாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இவர் ரொம்பவும் சீரியஸான கேரக்டரில் நடித்திருப்பார்.

கொன்றால் பாவம்: தயாள் பத்மநாபன் இயக்கத்தில் கடந்த வாரம் கொன்றால் பாவம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சார்லி, ஈஸ்வரி ராவ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடித்துள்ளார்கள். இதில் சார்லி, வரலட்சுமி அவர்களுக்கு அப்பாவாக நடித்திருப்பார். இப்படத்தில் இவர்கள் குடும்பம் கடன் தொல்லையால் வறுமையில் வாடும், கூலி வேலை பார்த்து வருவார்கள். ஒருவர் பேராசை பட்டால் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை அதிர்ச்சியுடன் சொல்வது தான் இப்படத்தின் கதையாகும்.  இதில் சார்லி வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

மாநகரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு மாநகரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீ, சுந்திப் கிசன், ரெஜினா கசாண்ட்ரா, மற்றும் சார்லி ஆகியோர் நடித்தார்கள். இதில் சார்லி டாக்ஸி டிரைவராக நடித்தார். இப்படத்தில் இவர் ஒரு சீரியஸான கேரக்டரில் நடித்திருப்பார். இந்தப் படம் தான் சார்லிக்கு ரீஎண்ட்ரி கொடுத்த படம் என்றே சொல்லலாம்.