1. Home
  2. எவர்கிரீன்

சந்திரமுகி முதலில் எடுக்க இருந்த பிரபல இயக்குனர்.. பெருந்தன்மையால் பி வாசுக்கு போன வாய்ப்பு


2002 ஆம் ஆண்டு வெளியான பாபா படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அவர் சினிமா வாழ்க்கையிலேயே அவர் சந்தித்த மிகப்பெரிய பிளாப் படம் ஆகும். இந்த படத்திற்கு ரஜினியே கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார். படையப்பா போன்ற ஒரு பெரிய ஹிட் கொடுத்துவிட்டு அப்படியே ஒரு மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தார்.

அதன் பிறகு ரஜினி இரண்டு ஆண்டுகளுக்கு எந்த படமும் ஒப்பந்தம் ஆகவில்லை. ரஜினி இனிமேல் அவ்வளவுதான் என எல்லோரும் நினைத்தனர். கோலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்று கூட பேச்சுக்கள் கூட வந்துவிட்டது. ஆனால் ரஜினியோ அடுத்து ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என கதைகளை கேட்டு கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் தான் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்னும் திரைப்படம் வெளியானது. இது மலையாள படமான மணிசித்ர தாழின் ரீமேக். இந்த படத்தில் சௌந்தர்யா மற்றும் விஷ்ணு வரதன் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்து பலரது பாராட்டையும் பெற்றது. அப்போது தற்செயலாக பெங்களூரு சென்ற ரஜினி இந்த படத்தை பாக்க அவருக்கு ரொம்பவும் பிடித்து போனது.

ரஜினி தன்னுடைய ஆஸ்தான ஹிட் டைரக்டரான KS ரவிக்குமாரை இந்த படத்தை இயக்க சொல்லியிருக்கிறார். KS ரவிக்குமார் ஏற்கனவே முத்து, படையப்பா என 2 ஹிட் படங்களை ரஜினிக்கு கொடுத்தவர். ஆனால் ரவிக்குமார் வாசுவின் படத்தை நான் இயக்கினால் நன்றாக இருக்காது என்று கூறிவிட்டாராம்.

பின்பு ரஜினி நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமார் மூலமாக இயக்குனர் P.வாசுவிடம் பேசி 'சந்திரமுகி' படம் உருவானது. வாசு தமிழில் ரஜினியின் மாஸ்க்கு ஏற்றவாறு சில காட்சிகளை மாற்றி இந்த படத்தை இயக்கினார். இந்த படம் 890 நாட்கள் திரையில் ஓடி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

பாபா போன்ற ஒரு அட்டர் பிளாப் தோல்விக்கு பிறகு ரஜினி ஒரு மேடையில் நான் யானை இல்லை கீழே விழுந்தால் எழாமல் இருக்க, நான் குதிரை ஓடிக்கொண்டே இருப்பேன் என்று கூறினார். அதே போல சந்திரமுகி மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.