90ஸ்களின் காலகட்டத்தில் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர்கள் கார்த்திக், ராமராஜன், முரளி இவர்களுக்கு இணையாக சினிமாவில் கலக்கப்போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் நம்பிக்கை இருந்தது. இவரிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வசீகரமும் , நடிப்பு திறமையும் சொல்லிக்கொள்ளும்படி நன்றாகவே இருந்தது.
ஆரம்ப காலங்களில் இவர் நடித்த ஒன்று, இரண்டு படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு சூப்பர் ஹிட் படங்களாகவும் அமைந்தன. அந்த படங்களை வைத்து இந்த நடிகரும் ஒரு சில ஆண்டுகளுக்கு கோலிவுட்டில் ஹீரோவாக கலக்கினார். மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்னர் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க தவறியதால் இவருடைய சினிமா வளர்ச்சியில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டது என்றே சொல்லலாம். இதனால் ஒரு சில படங்களில் கௌரவ வேடங்களில் கூட இவர் நடிக்க தொடங்கினார்.
காலப்போக்கில் மூன்று நான்கு ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படங்களில் கூட தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார் இந்த நடிகர். அத்தனை பேருக்கும் நடுவிலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ரொம்பவும் கச்சிதமாக செய்து முடித்தார்.
அதன் பின்னர் இவருக்கு படிப்படியாக வாய்ப்புகள் குறையவே சொந்த படம் எடுக்கிறேன் என்று களத்தில் இறங்கினார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும், ஒரு சில படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களிலும் நடித்தார். ஆனால் இவருடைய சொந்த தயாரிப்பு கை கொடுக்கவில்லை. எடுத்த படங்கள் எல்லாம் படு தோல்வியை சந்தித்தன.
இது போதாது என்று இந்த நடிகர் ஹோட்டல் பிசினஸ் செய்கிறேன் என்று சம்பாதித்த மொத்தத்தையும் விட்டுவிட்டார். கூட சேர்ந்த நண்பர்களே அவரை ஏமாற்றியதால் இப்பொழுது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் அந்த 90ஸ் ஹீரோ. கிட்டத்தட்ட 50 லட்சம் பணத்தை நண்பர்களிடம் தொழிலுக்காக கொடுத்துள்ளார். ஆனால் அந்த நண்பர்கள் அவரை ஏமாற்றிவிட்டு கம்பி நீட்டி விட்டனர்.