1. Home
  2. எவர்கிரீன்

பயம், சஸ்பென்ஸ், சர்வைவல்! Netflix-இல் ஆதிக்கம் செலுத்தும் டாப் 6 ஹாரர் Web Series

Netflix Web series

அதிரடி ஆக்‌ஷன், சர்வைவல் த்ரில்லர் மற்றும் ஹாரர் விரும்பும் ரசிகர்களுக்காக நெட்ஃபிக்ஸ் தளத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 6 தொடர்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. மர்மமான நகரம் முதல் நிலவில் நடக்கும் விபத்து வரை, ஒவ்வொரு தொடரும் தனித்துவமான பயத்தையும், மனித உணர்வுகளின் போராட்டத்தையும் வெளிப்படுத்துகின்றன.


நெட்ஃபிக்ஸ் தளத்தில், சமீப காலமாக கொரிய நாடகத் தொடர்கள் (K-Dramas) மற்றும் சர்வைவல் த்ரில்லர் தொடர்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. சஸ்பென்ஸ், பயம் மற்றும் உயிர்ப் போராட்டம் ஆகிய உணர்வுகளை ஒருசேரத் திரையில் பார்ப்பதை விரும்பும் ரசிகர்களுக்காக, உலக அளவில் பேசப்பட்ட 6 மிரட்டலான தொடர்களை இங்கே காணலாம். இவை அனைத்தும் உங்களைக் கதைக்குள் ஈர்த்து, அடுத்த எபிசோடுக்கு உங்களை அடிமையாக்கும் திறன் கொண்டவை.

முதலில், ஒரு மர்மமான ஊரைப் பற்றிய தொடர்: 'From'. இந்த மர்மமான ஊருக்குள் நுழைந்தவர்கள் யாரும் வெளியே போனதே இல்லை. இந்த ஊரின் மிகப்பெரிய பயமே, இரவு நேரத்தில்தான் தொடங்குகிறது. இரவில் மனித உருவம் எடுத்த அரக்கர்கள் வேட்டை தொடங்கும் போது, ஒவ்வொரு எபிசோடும் புதுப்புதுக் கேள்விகளையும், தாங்க முடியாத பயத்தையும், சஸ்பென்ஸையும் அள்ளித் தெளிக்கிறது.

ஜப்பானிய சர்வைவல் த்ரில்லர் ரசிகர்களுக்கான அடுத்த தொடர், 'Alice in Borderland'. வெறிச்சோடிய டோக்கியோ நகரமே இதன் களம். உயிரோடு இருக்க வேண்டும் என்றால், போட்டியாளர்கள் கொடூரமான விளையாட்டுகளில் கட்டாயம் ஜெயிக்க வேண்டும். தோற்றால் உடனடி மரணம் உறுதி. இது ஒரு மைண்ட் கேம் மற்றும் சர்வைவல் தொடர் ஆகும். புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் இணைந்து இதில் முழு பவருடன் செயல்படுகின்றன.

அரக்கர்கள் முதல் சூரிய ஒளி வரை.. த்ரில்லிங் சவால்கள்!

நெட்ஃபிக்ஸ்-இன் மிகவும் பிரபலமான கொரியன் ஹாரர் தொடர்களில் ஒன்று, 'Sweet Home'. மனிதர்களின் உள்ளே இருக்கும் அதீத ஆசையும் கோபமும் அரக்கனாக மாறும் போது என்ன நடக்கும் என்பதே கதை. ஒரு அபார்ட்மென்ட்டுக்குள் மனிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றப் போராடும் இந்தக் கதை, வெறும் ஹாரராக இல்லாமல், மனித உணர்வுகளுடன் (Emotional Connect) ஆழமாகப் பிணைந்துள்ளது.

அடுத்ததாக, அசாத்தியமான சஸ்பென்ஸுடன் நிலவுக்குச் செல்லும் கதை, 'The Silent Sea'. சந்திரனில் நடந்த ஒரு ரகசிய விபத்துக்குப் பின்னால், அங்கு உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்வதற்காகப் புதிய குழு ஒன்று அனுப்பப்படுகிறது. அங்கே ஒவ்வொரு கதவும் திறக்கும் போதும் புதிய மர்மங்கள் அவிழ்க்கப்படுகின்றன. இது மிகவும் அமைதியாக நகரும் தொடராக இருந்தாலும், மனதை நெருக்கும் சஸ்பென்ஸ் கொண்டது.

சர்வைவல் பிரிவில் மிக விசித்திரமான கதைக்களம் கொண்ட தொடர் 'Into the Night'. சூரிய ஒளி பட்டால் உடனே மரணம் நிகழும் ஒரு உலகத்தில், மனிதர்கள் இரவையே துரத்தி ஒரு விமானத்தில் பயணம் செய்கிறார்கள். நேரம் ஓட ஓட உயிரைக் காப்பாற்றப் போராடும் இந்த மனிதர்களிடையே, அவர்களின் உண்மையான குணங்கள் வெளிப்பட்டு, பல திருப்பங்களைக் கொடுக்கின்றன. ஐரோப்பிய மொழியில் உருவான இது, வித்யாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்.

கடைசியாக, இன்னொரு அழிவுக் கதை: 'The Rain'. இந்தத் தொடரின் உலகம், மழை பெய்தால் மனிதர்கள் இறந்து போவார்கள் என்ற அதிர்ச்சியான கருவைக் கொண்டது. இரண்டு சகோதரர்கள் உயிர்பிழைக்க ஓடும் இந்த ஆபத்தான பயணத்தில், நம்பிக்கை, குடும்ப பாசம், மனிதத் தன்மை எனப் பலவும் சோதனைக்கு உள்ளாகின்றன. இயற்கையே எதிரியாக மாறும் இந்தத் தொடர், உணர்வுபூர்வமான சவால்களை எதிர்கொள்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.