யுவன் பிஜிஎம்மில் முதல் 5 இடத்தைப் பிடித்த மூவிஸ்.. அஜித்துக்கு போட்டு மரண மாஸ் கிளப்பிய படம்
யுவனின் சிறந்த BGM.
Yuvan Shankar Raja Best BGM: கோலிவுட்டின் ‘பிஜிஎம் கிங்’ என புகழப்படும் யுவன், இதுவரை இசையமைத்த படங்களில் ஐந்து படங்களுக்கு அவர் போட்ட பிஜிஎம் ரசிகர்களை ஆரவாரப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் அஜித்துக்கு சிறப்பான பிஜிஎம்மை கொடுத்து மரண மாஸ் கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜாவின் வாரிசான யுவன் சங்கர் ராஜா இசையமைத்த படங்களில் பிஜிஎம்-இல் முதல் ஐந்து இடத்தை பிடித்த படங்களை பற்றி பார்ப்போம். காதல் கொண்டேன்: தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான். எல்லோருக்கும் காதல் கொண்டேன் படம் என சொன்னதுமே பேக்ரவுண்டில் ஒரு மியூசிக் ஒலிக்கும். அதுவும் ரொம்பவே மென்மையான காதல் உணர்வை தூண்டி விடக் கூடிய வகையில் இருக்கும். அந்த பிஜிஎம் இன்றும் பலருடைய காலர் டியூன் ஆக இருக்கிறது. மன்மதன்: 365 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்த மன்மதன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்தார். இந்த படத்தின் வெற்றிக்கு இவருடைய பிஜிஎம் முக்கிய பங்கு வகித்தது. இதில் இரட்டை வேடத்தில் சிம்பு நடித்தார், தன்னுடைய தம்பியின் மரணத்தால் பாதிக்கப்பட்டு கொலையாளியாக மாறும் மன்மதனை காட்டும் போது மட்டும் பேக்ரவுண்டில் ஒரு பிஜிஎம்-ஐ ஒலிக்க விடுவார்கள். அதைக் கேட்கும் போதே ஒரு விதமான திகைப்பு ரசிகர்களுக்கு ஏற்படும். அதுதான் அந்த படத்தை வெற்றியடைய வைத்தது.
