1. Home
  2. எவர்கிரீன்

நிக்சனை வைத்து டபுள் கேம் ஆடும் ஐஷு.. பிக்பாஸை அலறவிட்ட சைக்கோ தான் இவர் காதலனா?

நிக்சனை வைத்து டபுள் கேம் ஆடும் ஐஷு.. பிக்பாஸை அலறவிட்ட சைக்கோ தான் இவர் காதலனா?
நிக்சன் உடன் ஓவர் நெருக்கம் காட்டும் ஐஷுவின் உண்மையான காதலர் இவர்தான்.

Bigg Boss - Season 7: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாத பாப்பா போல் இருந்த ஐஷு இப்போது பலரின் வெறுப்புக்கும் ஆளாகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் நேரத்திற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளும் இவருடைய குணம் தான். அதிலும் நிக்சனை வைத்து இவர் ஆடும் டபுள் கேம் இப்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. ஆரம்பத்தில் அவரை தம்பி தம்பி என்று கூவிக் கொண்டிருந்த ஐஷு இப்போது ஓவர் நெருக்கம் காட்டுவதும், இரவு, பகல் பாராமல் பேசிக் கொண்டிருப்பதும் முகம் சுளிக்க வைக்கிறது. அதிலும் சமீபத்தில் இருவரும் ஸ்மால் பாஸ், பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டு முத்தமிடுவது போல் செய்த சேட்டையும் கழுவி ஊற்றாத குறையாக கலாய்க்கப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து பல இடங்களில் மைக்கை மாட்டாமல் இவர்கள் ரகசியம் பேசியதும் கண்டனத்திற்கு ஆளானது. இதையெல்லாம் பார்த்த கமல் கடந்த வாரம் நிக்சனை நன்றாக ரோஸ்ட் செய்தார். ஆனாலும் இவர்கள் திருந்திய பாடில்லை. இந்நிலையில் நிக்சனுடன் ஓவராக நெருக்கம் காட்டும் ஐஷுவுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலன் இருக்கும் விவரம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் அவர் இதற்கு முந்தைய சீசனில் பிக்பாஸையே அலறவிட்ட சைக்கோ நிரூப் தான் என்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒரு சேர அளித்துள்ளது. பிக்பாஸ் அமீரின் நெருங்கிய நண்பனான இவரைத் தான் ஐஷு காதலித்து வருகிறார். இப்படி இருக்கும்போது தெரிந்தே நிக்சனின் உணர்வுகளில் அவர் விளையாடுவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. அது மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் இதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள். அதை ஐஷுவே ஒரு முறை வெளிப்படையாக பேசி இருந்தார். மேலும் தன் வீட்டிற்கு செல்ல கூட பயமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதையெல்லாம் பார்க்கும் போது அவர் ஒவ்வொன்றையும் தெரிந்தே தான் செய்கிறார் என்பது தெளிவாகிறது. இதைத்தான் இப்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதன் மூலம் ஐஷு அதிகம் வெறுக்கப்படும் ஒரு போட்டியாளராக மாறி இருக்கிறார். இது இந்த வார நாமினேஷனில் நிச்சயம் தெரிய வரும். தற்போது ஓட்டிங் அடிப்படையில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கும் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.