சினிமா வேண்டாம், வேற துறையில் சாதித்த 6 நடிகர்களின் வாரிசுகள்.. மெடல்களை குவிக்கும் மாதவனின் மகன்
சினிமா இல்லாமல் பிற துறைகளில் சாதித்த பிரபலங்களின் வாரிசுகள்.
6 Heirs of celebrities: சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகள் திரையுலகில் ஈசியாக என்ட்ரி கொடுப்பார்கள். ஆனால் அப்படி வாரிசு நடிகர் நடிகைகளாக வர விரும்பாமல் வேறு துறையை தேர்ந்தெடுத்து சாதித்த 6 பிரபலங்களின் வாரிசுகளை இப்போது தமிழ் திரையுலகம் மட்டுமல்ல இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. கமலா செல்வராஜ்: ஜெமினி கணேசன் மகளான கமலா செல்வராஜ், சென்னையில் மிகப் பிரபலமான மகப்பேறு மருத்துவர். இவர்தான் முதல் டெஸ்ட் டியூப் பேபியை அறிமுகப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெமினி கணேசன் இரண்டாவது மகளான ஜெயா ஸ்ரீதரும் ஒரு மருத்துவர் தான். விஜய் சங்கர்: ஜெய்சங்கரின் மகனான விஜய் சங்கர் சென்னையில் ஒரு சிறந்த கண் மருத்துவர். இவர் ஏழைகளுக்கு தன்னுடைய மருத்துவமனையில் இலவசமாக கண் அறுவை சிகிச்சை களை செய்தவர். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பரும் கூட. விஜய் சங்கர் ஏழை எளியவர்களுக்காக செய்யும் உதவிக்காக அஜித்தும் தன்னால் முயன்ற உதவிகளை பணமாக அளித்திருக்கிறார். சுதன் ஜெய் நாராயணன்: கோலிவுட்டில் 300க்கும் மேற்பட்ட படங்களில் 30 வருடங்களுக்கு மேலாக நடித்த பிரபல காமெடி நடிகர்தான் சின்னி ஜெயந்த். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பல குரல்களில் பேசும் கலைஞராகவும் புகழ் பெற்றவர். இவருடைய மகன் சுதன் ஜெய் நாராயணன் சினிமாவிற்கு வர விரும்பாமல் கலெக்டராக வேண்டும் என்ற கனவுடன் யூபிஎஸ்சி தேர்வு எழுதி, அகில இந்தியா அளவில் 75வது இடத்தைப் பெற்று திருப்பூர் சப் கலெக்டராக பணியாற்றுகிறார்.
