1. Home
  2. எவர்கிரீன்

பிட்டு படம் போல குடும்பத்தோடு பார்க்க முடியாத ஜெயம் ரவியின் 6 மூவிஸ்.. மோசமான லிஸ்டில் சேர்ந்த இறைவன்

பிட்டு படம் போல குடும்பத்தோடு பார்க்க முடியாத ஜெயம் ரவியின் 6 மூவிஸ்.. மோசமான லிஸ்டில் சேர்ந்த இறைவன்
இந்த பூனையும் பால் குடிக்குமா என்னும் அளவுக்கு ஜெயம் ரவி நடித்த சில பலான படங்களும் இருக்கின்றன.

Actor Jayam Ravi: ஜெயம் ரவி எப்போதுமே சர்ச்சைகளில் சிக்காத சேப் சைடு கதாநாயகனாகத்தான் மக்களுக்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களின் மூலம் குழந்தைகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ்களை தன் கை வசம் வைத்துக் கொண்டார். ஆனால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்னும் அளவுக்கு இவர் நடித்த சில பலான படங்களும் இருக்கின்றன. தாஸ்: ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமாகி நடித்த முதல் ஆக்சன் படம் தாஸ். இந்த படத்தில் ரேணுகா மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதிரடி ஆக்சன் படம் என்றாலும் கதாநாயகியுடன் ஆன காதல் காட்சிகள் ரொம்பவும் தூக்கலாகவே இருக்கும். இந்த காட்சிகளை குடும்பத்துடன் உட்கார்ந்து எல்லாம் பார்க்க முடியாது. மழை: ஜெயம் ரவி மற்றும் ஸ்ரேயா இணைந்து நடித்த படம் தான் மழை. ஸ்ரேயா அப்போதைய தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டக்கூடிய நடிகை. இந்த படத்திலும் முழுக்க ரொமான்டிக் சீன்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டார். இந்த படத்தில் வரும் காதல் காட்சிகளையும் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாது. இதயத்திருடன்: ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் இதய திருடன். இந்த படத்தில் ரவி கல்லூரி மாணவனாக நடித்திருப்பார். பிரகாஷ்ராஜுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இவர் காதலிப்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் காதல் காட்சிகளும் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கும். சகலகலா வல்லவன்: ஜெயம் ரவி அஞ்சலி மற்றும் த்ரிஷா என இரண்டு கதாநாயகிகளுடன் ஜோடி போட்ட படம் தான் சகலகலா வல்லவன். இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி அநியாயத்திற்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடி இருப்பார். திரிஷா மற்றும் ஜெயம் ரவியின் காட்சிகளும் கொஞ்சம் ஓவர் கிளாமரில் இருக்கும். பூமி: ஜெயம் ரவி நடித்த படங்களிலேயே அதிக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற படம் என்றால் அது பூமி தான். இந்த படத்தில் இருந்து அவரை பூமர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மாறி போனது. கற்பனையில் கூட சிந்திக்க முடியாத கதைகளும் என்ற பெயரில் வழக்கமான மசாலாக்களை போட்டு படத்தை சொதப்பி வைத்திருந்தார்கள். இந்த படமும் குடும்பத்தோடு பார்க்க முடியாத ஒன்று. இறைவன்: ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் ரிலீசான படம் தான் இறைவன். இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சர்டிபிகேட் வழங்கி இருக்கிறது. சைக்கோ கில்லர் படம் என்றாலும், ஒரு சில காட்சிகள் இந்த அளவுக்கு ஆழமாக வைத்திருக்க வேண்டாம் என்பதுதான் படம் பார்த்த பலரின் கருத்தாக இருந்தது. பேமிலி ஆடியன்ஸ்கள் இந்த படத்திற்கு வராததால் கலெக்ஷனும் அடிவாங்கி இருக்கிறது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.