லெஜெண்ட் சரவணாவின் புதிய பட அப்டேட்.. சாக்லேட் பாயாக உருக இருக்கும் அண்ணாச்சி

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவண அருள் நாயகனாக அறிமுகமான தி லெஜெண்ட் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குனர்கள் ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி இருந்தனர். இந்த படத்தை சரவண அருள் தான் தயாரித்து இருந்தார். வேல்ராஜ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர்.

தி லெஜெண்ட் ஒரு சைன்ஸ் பிக்சன் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அண்ணாச்சியுடன் இணைந்து ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். மறைந்த சின்ன கலைவாணர் விவேக்கிற்கு இது தான் கடைசி திரைப்படம்.

இந்த படம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. பிரபல OTT நிறுவனமும் லெஜெண்ட் படத்தை குறைந்த விலைக்கே வாங்கினார்கள். அண்ணாச்சி இனிமேல் படம் நடிக்க மாட்டார் என்று ஒரு பக்கமும் அவர் அடுத்த படத்திற்கு கதை கேட்டு கொண்டிருக்கிறார் என்று ஒரு பக்கமும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால் இப்போது அதிரடியாக லெஜெண்ட் சரவணாவின் அடுத்த படத்தை பற்றி தகவல்கள் வெளியாகி வருகிறது. அண்ணாச்சி தன்னுடைய அடுத்த படத்தில் சாக்லேட் பாயாக உருகி உருகி காதலிக்க இருக்கிறாராம். அந்த படம் ரொமான்டிக்- ஆக்சன் படமாக இருக்கும் என்கிறார்கள்.

லெஜெண்ட் படத்திற்காக மற்ற ஸ்டேட்களுக்கு சென்று வந்த அருள் சரவணன் இப்போது இந்த படத்தை முழுக்க முழுக்க வெளிநாட்டில் தான் எடுக்க போகிறாராம். எப்படியும் இந்த படத்தையும் அண்ணாச்சி தான் தயாரிப்பார் என்று சொல்கிறார்கள்.

எப்போதுமே தீபாவளிக்கு அதிரடி தள்ளுபடி கொடுக்கும் அண்ணாச்சி, இந்த வருட தீபாவளிக்கு தன்னுடைய புதிய படத்தின் அப்டேட்டை கொடுப்பார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இந்த படக்குழுவின் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.