இனி நடிக்கவே கூடாதுன்னு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட 6 பிரபலங்கள்.. அசினுக்கு வந்த கெட்ட நேரம்
கோலிவுட்டில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட 6 பிரபலங்கள்.
List of celebrities given red card in Kollywood: சினிமானிமாவில் இருக்கும் பிரபலங்களின் நடவடிக்கை சரியில்லை என்றால் உடனடியாகவே தமிழ் திரைப்பட நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கங்கள் முன்வந்து அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்து சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். அப்படிதான் தமிழில் நடிக்க கூடாது என பன்(ban) பண்ணப்பட்ட ஆறு பிரபலங்களைப் பற்றி பார்ப்போம். வடிவேலு: வைகை புயல் வடிவேலு புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில் திமுகவின் ஆதரவாளராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த்தை எல்லாம் மேடைகளிலும் தாக்கித் தர குறைவாக பேசினார். கேப்டனை தண்ணி வண்டி என்றெல்லாம் விமர்சித்த வடிவேலு, அதன் பின்பு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சினிமா வாய்ப்பே இல்லாமல் சும்மாவே இருந்தார். கேப்டனை தவறாக பேசியதோடு 24ம் புலிகேசி என்ற படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி, அதன் பின் படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தராமல் பல கோடி நஷ்டத்தை விளைவித்ததால் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் சங்கர் புகார் அளித்தார். அதனால் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுத்து சில வருடம் சினிமாவில் எந்த படத்தையும் நடிக்க விடாமல் செய்தனர். ஆனால் கடந்த 2021ல் இந்த தடையை விலகி மீண்டும் நடிக்க வந்தார், ஆனா அவர் நடித்த எந்த படமும் உருப்படியா ஓடல. கமல்: ராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் யுத்தமாக எடுக்கப்பட்ட விஸ்வரூபம் 2 படத்தின் கதையை எழுதி இயக்கி தயாரித்த உலகநாயகன் கமலஹாசன், அந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்த திட்டமிட்டார். இதற்கு ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்ப்பு தெரிவித்தது. அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கவும் முடிவெடுத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். பின்பு நான்கு வருடம் கழித்து தான் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் மறக்க முடியாத இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தார். சிம்பு: 80களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின் 2000ம் ஆண்டுகளில் டாப் ஹீரோவாக ரவுண்டு கட்டிய சிம்புவிற்கு 2012ம் ஆண்டிற்கு பிறகு கொஞ்சம் திமிரு ஏறிவிட்டது. இதனால் அவர் கமிட் ஆன படங்களுக்கெல்லாம் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, கால்சீட் தராமல் இழுத்தடித்தார். ஷூட்டிங்கிற்கு கால தாமதமாக வருவது, வந்தாலும் ஒழுங்காக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இது ஒன்றல்ல இரண்டல்ல நிறைய படங்களுக்கு இதையே சிம்பு வழக்கமாக வைத்திருந்ததால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் சில வருடங்கள் அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன் பின் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கி இப்போது வாலை சுருட்டிக் கொண்டிருக்கிறார்.

