1. Home
  2. எவர்கிரீன்

மணிவண்ணன் வில்லன் அவதாரம் எடுத்த 5 படங்கள்.. ஜாதி வெறி பிடித்து பகையை உருவாக்கின சேனாதிபதி

மணிவண்ணன் வில்லன் அவதாரம் எடுத்த 5 படங்கள்.. ஜாதி வெறி பிடித்து பகையை உருவாக்கின சேனாதிபதி
மணிவண்ணன் வில்லனாகவும் அவதாரம் எடுத்து சில படங்களில் நடித்திருக்கிறார்.

Actor Manivannan: மணிவண்ணன் ஒரு சிறந்த இயக்குனராகவும், காமெடி மற்றும் வில்லன் ஆகவும் பல பரிமாணங்களில் அவருடைய அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு கைவந்த கலையாக நக்கல் நையாண்டியும் கூடவே ஒட்டிக்கொண்டது. ஆனாலும் இதையெல்லாம் ஒதுக்கி வில்லனாகவும் அவதாரம் எடுத்து சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம். ஆசைத்தம்பி: செந்தில்நாதன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு ஆசைத்தம்பி திரைப்படம் வெளிவந்தது. இதில் அருண் பாண்டியன், அப்பாஸ், அஞ்சு அரவிந்த் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வில்லனாக மணிவண்ணன் நடித்திருப்பார். அவருக்கு கீழே வேலை செய்யும் அருண்பாண்டியன், தம்பியான அப்பாஸ் செண்டிமெண்டில் இருப்பார். இதனால் கடுப்பான மணிவண்ணன் அப்பாஸை கொலை செய்யும் கொடூர வில்லனாக நடித்திருப்பார். சேனாதிபதி: எம் ரத்னகுமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு சேனாதிபதி திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சௌந்தர்யா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மணிவண்ணன் நாகப்பன் என்ற கேரக்டரில் ஜாதி வெறி பிடித்து குடும்பத்திற்குள் பகையை ஏற்படுத்தும் வில்லாதி வில்லனாக நடித்திருக்கிறார். கொடிபறக்குது: பாரதிராஜா இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு கொடிபறக்குது திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ரஜினிகாந்த், அமலா, மணிவண்ணன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினிக்கு மணிவண்ணன் வில்லனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அவருடைய வில்லத்தனத்தை காட்டியிருப்பார். எட்டுப்பட்டி ராசா: கஸ்தூரிராஜா இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு எட்டுப்பட்டி ராசா திரைப்படம் வெளிவந்தது. இதில் நெப்போலியன், குஷ்பூ, ஊர்வசி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஆரம்பத்தில் நல்லவராக இருந்த மணிவண்ணன் அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தால் நெப்போலியனை பழி வாங்குவதற்காக குடும்பத்திற்குள் சகுனி வேலையை பார்த்து சின்ன பின்னமாக ஆக்கி விடுவார். தாய்மாமன்: குரு தனபால் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு தாய்மாமன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், மீனா, கவுண்டமணி, விஜயகுமார், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மணிவண்ணன் மக்கள் சொத்துக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்கும் விதமாகவும், அரசியல்வாதியாக பின்பு சத்யராஜுக்கு எதிராக பல சதி வேலைகளை செய்யும் வில்லனாகவும் அவதாரம் எடுத்திருப்பார்.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.