1. Home
  2. எவர்கிரீன்

2ம் பாகம் தான் ஒரே வழி.. கம்பேக் கொடுக்க காத்திருக்கும் 5 பிரபலங்கள்

2ம் பாகம் தான் ஒரே வழி.. கம்பேக் கொடுக்க காத்திருக்கும் 5 பிரபலங்கள்
தனக்கு வெற்றி கொடுத்த கதாபாத்திரங்களைப் போலவே மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கவும் செய்கின்றனர்.

5 Celebrites: பிரபலங்களை பொறுத்தவரை படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை கொண்டே மக்களிடையே பெரிதும் பேசப்படுவார்கள். அவ்வாறு தமிழ் சினிமாவில் இடம் பெற்று ஒரு சில படங்களில் வெற்றிக்கொடுத்து, அடுத்தடுத்து படங்களில் வெற்றி காணாத ஹீரோக்கள் ஏராளம்.

மேலும் தனக்கு வெற்றி கொடுத்த கதாபாத்திரங்களைப் போலவே மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கவும் செய்கின்றனர். அவ்வாறு தான் மேற்கொண்ட படங்களின் 2ம் பாகத்தில் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் 5 ஹீரோக்களை பற்றி இங்கு காண்போம்.

ஜெய்: பகவதி, சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா போன்ற படங்களில் இவர் நடிப்பில் வெற்றி கண்டிருந்தாலும், இவரின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. அவ்வாறு இருப்பின், 2013ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தில் நயன்தாராவை காதலிக்கும் கதாபாத்திரம் இவருக்கு மாபெரும் விமர்சனத்தை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து இவர் ஏற்ற ஏந்த படமும் பெருதளவு பேசப்படாத நிலையில் இதன் பாகம் 2 வில் கம்பேக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்.

அருள்நிதி: இயக்குனர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் ஹீரோவா இடம்பெற்ற பல கதாபாத்திரங்கள் இவருக்கு பெரிதாக பேசப்படவில்லை. அவ்வாறு இருக்க 2005ல் வெளிவந்த டிமாண்டி காலனி படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டதால், அதன் பாகம் இரண்டில் எப்படியாவது மீண்டும் வாய்ப்பை பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.

அருண்விஜய்: தந்தையின் சிபாரிசில் வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்த இவர் பாண்டவர் பூமி, இயற்கை போன்ற படங்களில் கதாநாயகனாக மக்களிடையே பெரிதும் பேசப்பட்டார். இருப்பினும் தன் 2 ஆம் இன்னிங்ஸில் வெற்றி கண்ட படம் தான் என்னை அறிந்தால். அதை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் இப்படத்தின் பாகம் 2 இருக்கு காத்துக் கொண்டிருக்கிறார்.

மாதவன்: இயக்குனர் மணிரத்னதால் தமிழில் அறிமுகமானவர் மாதவன். அலைபாயுதே, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் போன்ற வெற்றி படங்களை கொண்டு சாக்லேட் பாய் ஆக வலம் வந்த இவர் அதைத்தொடர்ந்து சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்பட்டார். இந்நிலையில் 2017ல் விக்ரம் வேதா என்னும் படத்தில் மாபெரும் வரவேற்பை பெற்றார். அதைத் தொடர்ந்து இவர் மேற்கொண்ட படங்கள் பெரிதும் பேசப்படாத நிலையில், விக்ரம் வேதா பாகம் 2க்கு காத்துக் கொண்டிருக்கிறார்.

ஜெயம் ரவி: ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. அதை தொடர்ந்து இவர் மேற்கொண்டு எண்ணற்ற படங்களில், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. அதை தொடர்ந்து டாப் 10 ஹீரோக்களில் இடம் பெற்றுள்ள இவர் சமீபத்தில் எந்த ஹிட் படங்களையும் கொடுக்காமல் இருக்கும் நிலையில், தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் அதில் தனி ஒருவன் பாகம் 2ம் குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.