1. Home
  2. எவர்கிரீன்

பூனம் பஜ்வா கவர்ச்சியில் எல்லை மீறிய 5 படங்கள்..

பூனம் பஜ்வா கவர்ச்சியில் எல்லை மீறிய 5 படங்கள்..
தான் நடித்த முக்கால்வாசி படங்களில் தன் கவர்ச்சி நடிப்பால் வாய்ப்பு பெற்றவர்தான் பூனம் பஜ்வா.

ஹீரோயின்களை பொறுத்தவரை என்னதான் நடிப்பிற்கு முயற்சி போட்டாலும், இவர்களின் கவர்ச்சி நடிப்புக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. பட வாய்ப்புக்காக இது போன்ற கதாபாத்திரங்களையும் ஏற்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் ஹீரோயின்கள்.

அவ்வாறு தான் நடித்த முக்கால்வாசி படங்களில் தன் கவர்ச்சி நடிப்பால் வாய்ப்பு பெற்றவர்தான் பூனம் பஜ்வா. மேலும் படங்களில் இவரையே சுற்றித்திரிந்த சக நடிகர்களும் உண்டு. அவ்வாறு இவர் நடிப்பில் எல்லை மீறிய 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

ரோமியோ ஜூலியட்: 2015 லக்ஷ்மன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ரோமியோ ஜூலியட். மேலும் இப்படத்தில்  ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, பூனம் பஜ்வா ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் பூனம் பஜ்வா சிறிய கதாபாத்திரத்தில் தான் இடம் பெற்றிருப்பார் இருப்பினும் இவரின் நடிப்பு வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.

குப்பத்து ராஜா: 2019ல் நகைச்சுவை படமாக வெளிவந்தது தான் குப்பத்து ராஜா. இப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், யோகி பாபு, பூனம் பஜ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேரியாக பூனம் பஜ்வா குடியிருக்கும் சேரி சீரமைப்பது போன்ற கதாபாத்திரத்தில் தன் கவர்ச்சியான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

ஆம்பள: 2015ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆம்பள. இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, பிரபு, விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் பூனம் பஜ்வா தன் கவர்ச்சியான நடனத்தால் குத்தாட்டம் போட்டு இருப்பார்.

துரோகி: 2010ல் ஸ்ரீகாந்த், விஷ்ணு, பூனம் பஜ்வா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் தான் துரோகி. இப்படத்தில் விஷ்ணுவை விரும்பும் கதாபாத்திரத்தில் தன் கவர்ச்சியான நடிப்பை வெளிகாட்டிருப்பார் பூனம் பஜ்வா. இப்படம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சேரி ஆரம்பம்: 2010ல் திரைவாணன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த படம் தான் கச்சேரி ஆரம்பம். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பூனம் பஜ்வா இடம் பெற்றிருப்பார். இவரின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். மேலும் குறிப்பாக இப்படத்திலும், தெனாவெட்டு படத்திலும் இவரை ஜீவா குட்டி போட்ட பூனை போல சுத்தி சுத்தி வந்திருப்பார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.