அந்த ஹீரோயின் நடித்தாலே ஹிட் தான்.. தமிழ் தெரியாத நடிகையுடன் போராடிய ரஜினி, கமல், பாரதிராஜா

அந்த ஹீரோயின் நடித்தாலே ஹிட் தான்.. தமிழ் தெரியாத நடிகையுடன் போராடிய ரஜினி, கமல் பாரதிராஜா, கமலுடன் அதிக ஹிட் படங்கள் நடித்த நடிகை அவர், ஸ்ரீதேவிக்கு பிறகு கோலிவுட்டில் இவருக்கு தான் அதிக மவுசு. வட இந்திய பெண்ணாக இருந்தாலும் இவருக்கு அமைந்த நிறைய கதாபாத்திரங்கள் கிராமத்து கதைகள் தான். கொஞ்சம் கூட வட இந்திய வாடை இல்லாத அளவிற்கு கச்சிதமாக நடித்தார் என்றே சொல்லலாம்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு நிறைய கதாநாயகிகளை அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளில் ஒருத்தர் கூட தோற்று போகவில்லை என்றே சொல்லலாம். ராதிகா, ரேவதி எல்லாம் இன்றும் கோலிவுட்டின் ராணிகளாக இருக்கிறார்கள்.

ராதிகா, ரேவதி, ராதா , ரஞ்சனி, ரேகா, ரஞ்சிதா, ராஜ்யஸ்ரீ என்ற R வரிசையில் இணைந்தவர்தான் ரதி அக்னிகோத்ரி. ரதி மும்பையை சேர்ந்தவர். பாரதிராஜாவின் புதியவார்ப்புகள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

ரதி பெயருக்கு ஏற்றார் போலவே நல்ல அழகுடையவர். ஆனால் அவருக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. தமிழ் தெரியாது என்றாலும் அவருடைய அழகுக்காக பாரதிராஜா அவரை நடித்தே வைக்க வேண்டும் என ஆசை பட்டு நடிக்க வைத்தாராம். இதனால் கஷ்டப்பட்டது என்னவோ கதாநாயகர்கள் தானாம்.

மொழி தெரியாவிட்டாலும் அவருடைய நடிப்பு திறமையால் ரதி கோலிவுட்டில் வெற்றி கொடி கண்டார் என்றே சொல்லலாம். ரஜினியின் முரட்டுகாளை, கழுகு, உல்லாசப்பறவைகள் போன்ற பல படங்களில் நடித்தார். இவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட் ஆனது. ரதி நடித்தாலே ஹிட் தான் என்னும் அளவுக்கு பெயர் வாங்கினார்.

ரதி கமலுடன் நடித்த ‘ஏக் துஜே கேலியே’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. வருடக்கணக்கில் திரையரங்குளில் ஓடியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என படு பிசியாக இருந்த ரதி நல்ல மார்க்கெட் இருக்கும் போதே அவருடைய அப்பா இறந்ததால் நடிப்பை நிறுத்தி கொண்டார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →