சினிமாவை பொறுத்த வரை ஒரு சில கூட்டணிகள் பக்காவாக கிளிக் ஆகிவிடும். ஆரம்ப காலங்களில் ரஜினி-கமல் கூட்டணியில் நடித்த அத்தனை படங்களுமே வெற்றி தான். அதே போல் 80ஸ் களின் இறுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தார்.
தாவணி கனவுகள், தேவர் மகன், படிக்காதவன், படையப்பா, ஒன்ஸ் மோர், பசும்பொன் போன்ற கேரக்டர்கள் இவரது இரண்டாவது இன்னிங்சில் மிக முக்கியமானவை. சிவாஜி-ரஜினி, சிவாஜி-சத்யராஜ் கூட்டணியில் அதிகமான படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சிவாஜி-சத்யராஜ் கூட்டணி நிறைய ஹிட் கொடுத்து இருக்கிறது.
புதிய வானம்: 1988 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் பி உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் புதிய வானம். இந்த படத்தில் சத்யராஜ், சிவாஜி கணேசன், ரூபினி, கௌதமி, விஜயகுமார், ஜனகராஜ், ராஜேஷ் குமார், நாசர்
சார்லி, ஜெய்கணேஷ், பொன்னம்பலம், ஒருவிரல் கிருஷ்ணா ராவ். இடிச்சபுளி செல்வராஜ், குண்டு கல்யாணம், கண்ணையா, எல்ஐசி நரசிம்மன், சாமுவேல், சேது விநாயகம், பேபி சுஜிதா, குயிலி, டிஸ்கோ சாந்தி, அனுஜா போன்றோர் நடித்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு: ஜல்லிக்கட்டு 1987 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன் திரைக்கதை எழுதி இயக்கிய படம். குற்றவாளியான சத்யராஜை நீதிபதி சிவாஜி தன்னுடைய சொந்த கஸ்டடியில் எடுப்பார். அப்போது அவர்களுக்குள் நடக்கும் மோதலும், நட்பும் தான் இந்த கதை. இந்த படம் நல்ல ஹிட் அடித்தது.
முத்துக்கள் மூன்று: 1987 ஆம் ஆண்டே வெளியான இன்னொரு திரைப்படம் தான் முத்துக்கள் மூன்று . இந்த படத்தை ஏ.கே ஜெகன்நாத் இயக்கி இருந்தார். சிவாஜி கணேசன், சத்யராஜ், பாண்டியராஜன், இரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர், நடிகர் விஜய டி ராஜேந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
ஹிட்லர் உமாநாத்: பி. மாதவன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம். ஹிட்லரினால் ஈர்க்கப்பட்ட சிவாஜி அவரை போலவே வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் ஹிட்லரின் கொடுமைகள் அனைத்தையும் அறிந்து மனம் மாறுவது போன்ற கதை. இந்த படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சத்தியராஜ், சுருளி ராஜன் ஆகியோர் நடித்தனர். MS விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
முதல் மரியாதை: 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி நடித்த திரைப்படம் முதல் மரியாதை. இந்த படத்தில் சிவாஜியின் மனைவி வடிவுக்கரசியின் முன்னாள் காதலனாக சத்யராஜ் நடித்திருப்பார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். வைரமுத்து பாடல் எழுதி இருந்தார்.