1. Home
  2. எவர்கிரீன்

செப்டம்பர் மாதம் தியேட்டர், ஓடிடியில் வெளியாக இருக்கும் 12 படங்கள்.. 1000 கோடி வசூலை குறி வைக்கும் கோட்

செப்டம்பர் மாதம் தியேட்டர், ஓடிடியில் வெளியாக இருக்கும் 12 படங்கள்.. 1000 கோடி வசூலை குறி வைக்கும் கோட்

September Release Movies: செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இனி அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வர ஆரம்பித்து விடும். அதேபோல் டாப் நடிகர்களின் படங்களும் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அப்படி செப்டம்பர் மாதம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படங்கள் பற்றி இங்கு காண்போம்.

தியேட்டரை பொறுத்தவரையில் வரும் ஐந்தாம் தேதி வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் கோட் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் புது டெக்னாலஜியுடன் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

இதற்கு அடுத்ததாக கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் வரும் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தை சூர்யா. ஜோதிகா தயாரித்துள்ளனர்.

ஓடிடியில் வெளியாகும் படங்கள்

அடுத்ததாக அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் லப்பர் பந்து வரும் 20ம் தேதி வெளியாகிறது. மேலும் ஓடிடியை பொருத்தவரையில் பலரும் அதிகம் எதிர்பார்த்த படங்கள் இம்மாதம் ஒவ்வொன்றாக வெளி வருகிறது.

அதன்படி அமேசான் ப்ரைம் தளத்தில் திகில் படமான பேச்சி, பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் ஆகிய படங்கள் வெளியாகிறது. இதை அடுத்து ஜி5 தமிழில் டிமான்டி காலனி 2, ரகு தாத்தா ஆகிய படங்கள் வெளியாகிறது.

விக்ரம் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற தங்கலான் நெட்ஃப்லிக்ஸ் தளத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கவனம் ஈர்த்த வாழை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகிறது. இது தவிர மின்மினி, கொட்டுக்காளி, போகுமிடம் வெகு தூரம் இல்லை ஆகிய படங்களும் இம்மாதம் வெளியாகிறது.

இதன் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இந்த மாதம் பரபரப்பாக செல்லும் நிலையில் அடுத்த மாதம் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் ஆகிய படங்கள் வெளியாகிறது. இது தவிர விடாமுயற்சி, கங்குவா, விடுதலை 2 என அடுத்தடுத்த படங்களும் ரிலீஸ்யுக்கு தயாராகிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.