1. Home
  2. எவர்கிரீன்

சிவாஜி படங்களில் 'A' சர்டிபிகேட் வாங்கிய ஒரே படம்.. முகம் சுளிக்க வைத்த காட்சிகள்

சிவாஜி படங்களில் 'A' சர்டிபிகேட் வாங்கிய ஒரே படம்.. முகம் சுளிக்க வைத்த காட்சிகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரலாற்று கதாபாத்திரங்கள் உட்பட பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பல வருடங்கள் கடந்தாலும் நினைவில் நிற்கும். அந்த அளவுக்கு தரமான திரை கதைகளை தான் அவர் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

மேலும் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் பார்க்கும் படியாக அவருடைய திரைப்படம் இருக்கும். ஆனால் அவர் நடித்ததில் ஒரே ஒரு திரைப்படம் மட்டும் சில முகம் சுளிக்கும் காட்சிகளை உள்ளடக்கி வெளிவந்தது. கலாச்சார சீர்கேடு என்று சொல்லும் அளவுக்கு அதில் பல வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

1979ம் ஆண்டு எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த கவரிமான் என்ற திரைப்படம் தான் அது. அதில் சிவாஜி ஒரு ஐஏஎஸ் ஆபீஸராக நடித்திருப்பார். அவருடைய மனைவி குடி பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார். மேலும் அவர் வேறு ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை நேரில் பார்த்த சிவாஜி அவரை கொன்று விடுவார்.

அதன் பிறகு அவர் ஜெயிலுக்கு செல்வது, மகளின் வெறுப்புக்கு ஆளாவது போன்ற விஷயங்கள்தான் தான் அந்த படத்தின் கதை. இப்போதைய சினிமா போல் அந்த கால சினிமா கிடையாது. இப்போது எல்லாம் கெட்ட வார்த்தை, ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் போன்றவை மிக சாதாரணமாக காட்டப்படுகிறது.

ஆனால் அந்த கால சினிமாவில் அது போன்ற காட்சிகள் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக தான் பார்க்கப்பட்டது. அதனாலேயே இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. சிவாஜி நடித்த திரைப்படங்களிலேயே ஏ சர்டிபிகேட் பெற்ற ஒரே திரைப்படமும் இந்த படம் தான்.

அந்த அளவுக்கு அந்த படத்தில் சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதை குடும்ப ஆடியன்ஸ் உட்பட யாரும் ரசிக்கவில்லை. அதன் பிறகு சிவாஜி தன்னுடைய படங்களில் இது போன்ற காட்சிகள் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.