திருடனுக்கு தேள் கொட்டியதாய் முழிக்கும் மித்ரா.. உண்மை புரியாமல் அன்பை வெறுக்கும் ஆனந்தி
சிங்க பெண்ணே சீரியலில் பரபரப்பான இன்றைய எபிசோடை பற்றி பார்க்கலாம்
Singapenne serial: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் ஒரு வழியாக பார்ட்டி முடிந்து எல்லோரும் அடுத்த நாள் ஆபீசுக்கு வந்து விட்டார்கள். ஒரு பக்கம் பார்ட்டியின் இரவில் தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் ஆனந்தி மற்றும் மகேஷ். இன்னொரு பக்கம் ஆனந்தி தன்னை தவறாக நினைத்து விட்டாலே என மன கஷ்டத்தில் அன்பு சுற்றிக்கொண்டு இருக்க, மித்ராவோ பார்ட்டி இரவில் மகேஷ் மற்றும் ஆனந்தி ஒரே ரூமில் இருந்தது யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என பயத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அன்பு வீட்டில் இருந்து கிளம்பும் பொழுதே எப்படியாவது இன்னைக்கு ஆனந்தி இடம் தன் மீது தவறு இல்லை என்பதை நிரூபித்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அம்புவின் அம்மாவுக்கு வந்து, அவனிடம் எதுவுமே கேட்காமலேயே உனக்கென்ன ஒன்னு இருந்தா அது கண்டிப்பா உன்கிட்ட வந்து சேரும் என்று சொல்கிறார். இது அன்புக்கு ஒரு மிகப்பெரிய மன தைரியத்தை கொடுக்கிறது. ஊருக்கு கிளம்பும் மித்ராவின் அம்மா சத்யா ஆனந்தியையும் வந்து பார்த்துவிட்டு போகிறார். அதைத் தொடர்ந்து ஆனந்தியும் ஆபீசுக்கு போய் விடுகிறாள். அங்கு ஏற்கனவே மகேஷ் பார்த்தியில் அவளிடம் காதலை சொல்ல முடியவில்லை என்று கவலையில் இருக்கிறான். அந்த நேரத்தில் ஆனந்தி அங்கு வர மகேஷ் தன் காதலை சொல்ல முற்படுகிறான், ஆனால் ஏதோ ஒரு தயக்கத்தால் அவனால் சொல்ல முடியாமல் போய்விடுகிறது. ஆனந்தியும் கார்மெண்ட்ஸ்க்கு போய் விடுகிறாள். அங்கு அவளைப் பார்த்ததும் அன்பு அந்த இரவு நடந்ததை பற்றி சொல்லியே ஆக வேண்டும் என்று முயற்சி செய்கிறான். ஆனால் ஆனந்தி அவனை பேசவிடாமல் ரொம்பவும் மோசமான வார்த்தைகளை பேசி அவனை கஷ்டப் படுத்துகிறாள். அப்போது முத்து மற்றும் ஆனந்தியின் தோழிகள் அன்புக்கு சப்போர்ட் செய்து, ஆனந்தியிடம் அன்புவை பற்றி அப்படி பேசாதே என்று எச்சரிக்கிறார்கள்.

