ஒரே படத்தால் தலைகீழாக மாறிய ஆட்டம்.. எம்ஜிஆரை ஓரங்கட்டி திணறடித்த சிவாஜி

தமிழ் சினிமாவை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. அவர் அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். திரையுலகை பொருத்தவரை இவரைத் தாண்டி ஒரு அணுவும் அசையாது.

அந்த அளவுக்கு எம்ஜிஆர் புகழின் உச்சியில் இருந்தார். ஆனால் அதெல்லாம் ஒரு காலகட்டம் வரை தான். நடிகர் திலகம் சிவாஜி திரை உலகில் காலடி வைத்த பின்பு நிலைமையே தலைகீழாக மாறியது. எம்ஜிஆர் தான் எல்லாம் என்று இருந்த சரித்திரத்தையே அவர் மாற்றினார்.

அதற்குக் காரணம் அவர் நடிப்பில் வெளிவந்த பராசக்தி திரைப்படம் தான். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதையில் வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சிவாஜிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இத்தனைக்கும் அவர் நடித்த முதல் படமே பராசக்தி தான். ஒரு அறிமுக நடிகருக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததும் அதுதான் முதல் முறை. அந்த அளவுக்கு அவரின் வெறித்தனமான நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது. கலைஞரின் வசனமும், சிவாஜியின் உயிரோட்டமான நடிப்பும் தான் பராசக்தி திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

அதன் பிறகு ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் பார்வையும் சிவாஜியின் மேல் தான் விழுந்தது. யார் இந்த பையன் என்று வியந்து போன அவர்கள் எம்ஜிஆரை விட்டுவிட்டு சிவாஜியை தங்கள் படங்களில் புக் செய்ய ஆரம்பித்தனர். இப்படித்தான் சிவாஜியின் திரைப்பயணம் ஆரம்பமானது.

அதைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிப்புக்கு சவால் விடும் பல கதாபாத்திரங்களிலும் அவர் அசால்டாக நடித்தார். இதன் மூலம் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவ்வாறு சிறிது சிறிதாக ஆரம்பித்த அவருடைய வளர்ச்சி பின்னாளில் எம்ஜிஆருக்கு இணையான ஒரு நடிகராக உயரும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.