செட்டாகாத சுந்தர்-சியின் அறுத பழசான ஃபார்முலா.. மொக்கை வாங்கிய 6 காமெடி படங்கள்

இயக்குனர் சுந்தர் சி பொறுத்த வரை அவருடைய படங்களில் எப்போதுமே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. முன்னணி நட்சத்திரங்களோடு காமெடியை மையமாக வைத்து படம் எடுப்பதில் பலே திறமைசாலி. ஆனால் சமீப காலமாக இவருடைய இந்த டெக்னிக் அந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை என்றே சொல்லலாம். காமெடி என்ற பெயரில் மரண மொக்கையான படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆம்பள: விஷால், வைபவ், சதீஷ், பிரபு, ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், கிரண் என முன்னணி நட்சத்திரங்களை வைத்து சுந்தர் சி இயக்கிய திரைப்படம் ஆம்பள. நல்ல குடும்ப பின்னணி கொண்ட கதையாக இவர் எடுத்திருந்தாலும் படத்தின் திரை கதையோ எண்பதுகளில் ரிலீசான நிறைய படங்களை ஞாபகப்படுத்தியது.

வந்தா ராஜாவா தான் வருவேன்: சுந்தர் சி தெலுங்கு படத்தை ரீமேக் செய்து இயக்கிய திரைப்படம் தான் வந்தா ராஜாவா தான் வருவேன். இந்த படத்தில் சிம்பு, பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்ரின் தெரேசா, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.

ரெண்டு: மாதவன் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் ரெண்டு. இந்த படத்தில் தான் முதன் முதலில் அனுஷ்கா தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி இன்று வரை பிரபலமாக இருந்தாலும், படத்தின் திரைக்கதை சரியாக அமையாததால் பிளாப் ஆனது.

லண்டன்: பிரசாந்த், பாண்டியராஜ், விஜயகுமார், ஸ்ரீ வித்யா, வடிவேலு, மும்தாஜ், மணிவண்ணன் ஆகியோர் நடித்த திரைப்படம் லண்டன். இந்த படத்தில் வடிவேலுவின் காமெடியே ரசிக்கும் படியாக அமையாமல் போனது. மேலும் படத்தின் திரைக்கதையும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

தீயா வேல செய்யணும் குமாரு: சுந்தர்.சி இயக்கத்தில், குஷ்பூ தயாரிப்பில் சித்தார்த், ஹன்சிகா மோத்வானி,கணேஷ் வெங்கட்ராமன், சந்தானம் ஆகியோர் நடித்த திரைப்படம் தீயா வேல செய்யணும் குமாரு. இந்த படமும் தோல்வியை அடைந்தது.

காபி வித் காதல்: ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாள்விகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்யதர்ஷினி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து தன்னுடைய ஃபார்முலாவை மீண்டும் பயன்படுத்திய படம் காபி வித் காதல். இந்த படம் கடந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.