1. Home
  2. எவர்கிரீன்

வசீகரத்தால் கைவசப்படுத்திய சன்னி லியோனின் 4 படங்கள்.. ஆட்டத்தைப் பார்க்க ஹவுஸ்புல்லான திரையரங்கு

வசீகரத்தால் கைவசப்படுத்திய சன்னி லியோனின் 4 படங்கள்.. ஆட்டத்தைப் பார்க்க ஹவுஸ்புல்லான திரையரங்கு
தற்போது தமிழ் சினிமா பக்கம் இவரின் பார்வை திரும்ப தொடங்கி இருக்கிறது

இளசுகளின் மனதில் தோன்றும் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் சன்னி லியோன். இவர் ஒரு சிறந்த தொழிலதிபர் மற்றும் நடிகையும் ஆவார். அவ்வாறு இருக்க தற்போது தமிழ் சினிமா பக்கம் இவரின் பார்வை திரும்ப தொடங்கி இருக்கிறது. அது தமிழ் ரசிகர்களிடையே ஆர்வத்தை உண்டு படுத்துகிறது.

இந்நிலையில் 2012ல் பாலிவுட்டில் இவர் தன் சினிமா பயணத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் தற்பொழுது தமிழ் சினிமாவில் சில படங்களில் கால் சீட் கொடுத்து வருகிறார். அவ்வாறு இவர் நடிப்பில் இளசுகளை சுண்டி இழுத்த 4 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

வடகறி: 2014ல் சரவண ராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வடகறி. இப்படத்தில் ஜெய், சுவாதி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இந்த படத்தில் வரும் ஒரு பாடலில் சன்னி லியோன் இடம் பெற்றிருப்பார். இந்த ஒரு பாடலை காண்பதற்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தமிழ் ரசிகர்களால் இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

ஓ மை கோஸ்ட்: 2002ல் யுவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் சதீஷ், சன்னி லியோன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் சன்னி லியோனின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இவரின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது.

வீரமாதேவி: இப்படத்தை வீ சி வடிவுடையான் இயக்குகிறார். மேலும் வரலாற்று கதையை மையமாகக் கொண்டு போர் புரியும் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். மேலும் இப்படத்தை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதன் பட்ஜெட் ஆக பார்க்கையில் 100 கோடி ஆகும். மேலும் இப்படத்தில் இவரின் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகிறது.

கொட்டேஷன் கேங்: ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தை விவேக் கே கண்ணன் இயக்கி உள்ளார். இப்படம் ஒரு கிரைம் கில்லர் படமாகும். மேலும் இப்படத்தில் சன்னி லியோன்,ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் சன்னி லியோனின் ரோல் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் முன் வைத்து வருகிறார்கள். இத்தகைய ஆவலை இப்படம் மூலம் இவர் பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.