1. Home
  2. எவர்கிரீன்

2025ல் மணக்கோலம் கண்ட 6 தமிழ் நடிகைகள்!

samantha-marriage

திரையுலகில் இந்த ஆண்டு திருமணமான மற்றும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிரபலங்களின் விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.


2025 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காதல் கைகூடிய ஆண்டாக அமைந்தது. பல முன்னணி நடிகைகள் மற்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திரங்கள் இந்த ஆண்டு தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி, ஈஷா யோக மையத்தில் உள்ள லிங்கபைரவி கோவிலில் மிகவும் எளிமையான முறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தனது நீண்ட நாள் காதலரான நவ்நீத் என்பவரை இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி 2 ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் தனது 34 வயதில் திருமண பந்தத்தில் இணைந்தார்.

'நாடோடிகள்' படம் மூலம் பிரபலமான மாற்றுத்திறனாளி நடிகை அபிநயா, தன்னைப் போலவே மாற்றுத்திறனாளியான வேகேசன கார்த்திக் என்பவரை கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டார்.

பார்வதி நாயர், பாவனி ரெட்டி, சம்யுக்த சண்முகநாதன் ரசிகர்களுக்குப் பரிட்சயமான இந்த நடிகைகளும் இந்த 2025 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டு தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். இவர்களின் திருமணப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

திருமண பந்தத்தில் இணைவதற்கு முதல் படியாக, சில திரைப் பிரபலங்கள் இந்த ஆண்டு தங்கள் துணையுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் இந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இவர், தனது நீண்ட நாள் காதலியான, நடிகை சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி மற்றும் ஜனனி ஆகியோரும் இந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர். இவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நட்சத்திரங்களின் புதிய வாழ்க்கை சிறப்பாக அமைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.