தேடிவந்த வாய்ப்பை உதாசீனப்படுத்திய நடிகை.. சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்

Actor Rajini: சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருக்கிறது. வளர்ந்து வரும் ஹீரோயின்கள் முதல் முன்னணியில் இருக்கும் அத்தனை நடிகைகளும் இவர் படத்தில் ஒரு கேரக்டராவது கிடைத்து விடாதா என்று ஏங்குகிறார்கள். ஆனால் பிரபல நடிகை ஒருவர் இவருடைய படத்தில் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான பட வாய்ப்புகள் இவருக்கு வந்திருக்கிறது. ஆனால் இவர் ஷூட்டிங் வரை சென்று விட்டு பிறகு நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட நடிகை வேறு யாரும் கிடையாது ஒரு காலத்தில் ஹீரோயின் ஆகவும் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கி வரும் நளினி தான்.

80 காலகட்ட சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு கருத்து வேறுபாடு, விவாகரத்து என திசை மாறிப் போன இவருடைய வாழ்க்கை தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப வைத்திருக்கிறது.

அந்த வகையில் தற்போது சின்னத்திரை, பெரிய திரை என கலக்கிக் கொண்டிருக்கும் இவர் ஒரு பேட்டியில் ரஜினியுடன் நடிக்க மறுத்த விஷயத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ரஜினியுடன் தங்க மகன், கை கொடுக்கும் கை, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவரும் முதலில் சம்மதம் தெரிவித்து சூட்டிங் சென்றிருக்கிறார். ஆனால் அந்த சூழ்நிலை அவருக்கு பொருந்தாத காரணத்தினால் நடிக்க மாட்டேன் என்று திரும்பி வந்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இவர் நடிக்க மாட்டேன் என்று மறுத்திருக்கிறார்.

இப்படி ஒரு வாய்ப்பை ஏன் தவறவிட்டீர்கள் என்று கேட்டதற்கு அவர் எனக்கு தெரியவில்லை, ஏதோ ஒன்று எனக்கு பிடிக்காதது போல் இருந்தது. அதனால் நான் நடிக்காமல் வந்து விட்டேன். இப்படி பல படங்கள் கைநழுவி சென்றிருக்கிறது என கூறியிருக்கிறார். அவர் கூறிய இந்த விஷயம் பலருக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் தான் இருக்கிறது.