சிவாஜிக்கு பட்ட நன்றிகடனால் எம்ஜிஆரை ஒதுக்கிய தயாரிப்பாளர்..

எம்ஜிஆர் அடித்தட்டு மக்கள் விரும்பும் படியான படங்கள் நடித்து தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தார். அதன் பின்பு பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் எம்ஜிஆர் நடித்து வந்த நிலையில் படம் வெற்றி பெறாமல் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த தயாரிப்பாளர் மீண்டு வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

அந்த காலகட்டத்தில் சிவாஜியின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் அப்போது எம்.ஜி.ஆர் தனது தயாரிப்பாளரை கூப்பிட்டு சிவாஜியின் படத்தை பண்ணுங்கள் என அறிவுரை வழங்கி உள்ளார். அதாவது 70களில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுஜாதா சினி ஆர்ட்ஸ் திரைப்படத்தின் நிறுவனர் கே பாலாஜி தான் அவர்.

இவர் ஜெமினி கணேசனின் அண்ணாவின் ஆசை என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். மேலும் சில படங்களில் கதாநாயகன், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். எம்ஜிஆர் படங்களை தயாரித்து நஷ்டம் ஏற்பட்ட நிலையில் அவரின் ஆலோசனைப்படி சிவாஜி படத்தை தயாரிக்க தொடங்கினார்.

சொர்க்கம், தியாகம், எங்கிருந்தோ வந்தாள், நினைவுக் குறிகள், நீதி, திருடன், என் தம்பி, தங்கை, நல்லதொரு குடும்பம் போன்ற சிவாஜியின் படங்களை தயாரித்துள்ளார். இந்த படங்கள் வெற்றி பெற முன்னணி தயாரிப்பாளராக கே பாலாஜி திகழ்ந்தார்.

இப்படி தன்னை வளர்த்த சிவாஜிக்கு தனது நன்றிக் கடனை அடைக்க நிறைய படங்கள் கொடுத்தார். கிட்டத்தட்ட சிவாஜி, கே பாலாஜி கூட்டணியில் 25க்கு மேற்பட்ட படங்கள் உருவாகி இருந்தது. மேலும் கே பாலாஜி தயாரிப்பில் வெளியான படங்களில் 90% வெற்றி படங்கள் தான்.

சிவாஜுக்கு பிறகு கமல், ரஜினிகாந்த் ஆகியோரை நடிக்க வைத்த வெற்றி படங்களை பாலாஜி கொடுத்துள்ளார். ஆனால் தன் நஷ்டத்தில் இருக்கும் போது அறிவுரை சொன்ன எம்.ஜி.ஆரை அதன் பின்பு கே பாலாஜி ஒதுக்கிவிட்டார். ஆனால் அதையெல்லாம் பற்றி கவலைப்படத எம்ஜிஆர் அவருக்கு வழி விட்டு வாழ வைத்தார்.