ஆரம்ப காலகட்டங்களில் பேருந்து நடத்துனராக இருந்து படிப்படியாக முன்னேறியவர் தான் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் தனது சிறு பங்களிப்பின் மூலம் திரைத் துறையில் கால் பதித்தார். தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதன்பின்னர் படிப்படியாக தனது நடிப்பின் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். தனது கடின உழைப்பின் மூலம் புகழின் உச்சியை தொட்ட இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த்க்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எந்த படத்தின் மூலம் எந்த சமயத்தில் வழங்கப்பட்டது என்ற சீக்ரெட் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதுவும் இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பெயர் யாருக்கும் பொருந்தவில்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர். பல பேர் அந்த பெயருக்காக அடித்துக் கொண்டனர். ஆனால் இப்பொழுது வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை யாராலும் தட்டிப் பறிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியுள்ளார். அதுவும் ரஜினிகாந்த் அவர்கள் தனி கதாநாயகனாக நடித்த பைரவி திரைப்படத்திற்கு பின்னரே இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரஜினி நடிப்பில் வெளியான முழு முதல் திரைப்படம் ஆகும்.
மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் எம் பாஸ்கர் இயக்கத்தில் கலைஞானம் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்துள்ளார். இதில் ரஜினியின் ஸ்டைல் ஆனது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதுவும் இவரின் உடை, ஹேர் ஸ்டைல் என அனைத்தையும் ரசிகர்கள் பின்பற்ற தொடங்கும் அளவிற்கு அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த முள்ளும் மலரும், தப்பு தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், அபூர்வராகங்கள் போன்ற படங்களின் மூலம் அடுத்தடுத்த வெற்றிகளை வாரி குவித்தார். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படம் ரஜினிகாந்த் திரை வாழ்விற்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே சொல்லலாம்.
இவர் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த்திற்கு மட்டுமே சூப்பர் ஸ்டார் பட்டம் பொருந்தும் என்று அதனை மக்கள் அனைவரும் முழு மனதாக ஏற்றுக் கொண்டனர். அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர் ரஜினிகாந்த் மட்டுமே என்று அளவிற்கு ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துள்ளார்.