1. Home
  2. எவர்கிரீன்

ஜெய்சங்கரின் பெயரை கெடுத்த 3 படங்கள்.. கண்களே கூசும் அளவிற்கு நற்பெயரெடுத்த இயக்குனர் பண்ணிய வேலை

ஜெய்சங்கரின் பெயரை கெடுத்த 3 படங்கள்.. கண்களே கூசும் அளவிற்கு நற்பெயரெடுத்த இயக்குனர் பண்ணிய வேலை
எம்ஜிஆர், சிவாஜியை வைத்து பல திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஜெய்சங்கரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் சில திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதே போன்று ஜெய்சங்கருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். சுருக்கமாக சொல்லப்போனால் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து இருக்கிறார்.

ஆனால் அவர் பிசியான நடிகராக இருந்தபோதே சில மோசமான படங்களையும் கொடுத்திருக்கிறார். அதாவது அவர் நடித்த சில திரைப்படங்கள் குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு கிளாமராகவும் கண் கூச வைக்கும் வகையில் காட்சிகள் உள்ளடக்கியதாகவும் இருந்திருக்கிறது. அதிலும் எம்ஜிஆர், சிவாஜியை வைத்து பல திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஜெய்சங்கரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் சில திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார்.

அதாவது அந்த காலகட்டத்தில் பிரபல இயக்குனராக இருந்தவர் தான் கர்ணன். இவர் ஏராளமான திரைப்படங்களை கொடுத்து முன்னணியில் இருந்தவர். அதிலும் இவருடைய ஒவ்வொரு படைப்புகளும் தரமானதாக தான் இருக்கும். ஆனாலும் இவர் இயக்கிய சில திரைப்படங்கள் குடும்பத்தோடு பார்க்க முடியாத படியும் இருந்திருக்கிறது. அது எந்தெந்த படங்கள் என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

கங்கா 1972 ஆம் ஆண்டு கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர் உடன் இணைந்து ராஜ கோகிலா நடித்திருப்பார். அதில் ஜெய்சங்கர் குடிக்கு அடிமையானவராகவும் பெண் மயக்கத்தில் இருப்பவராகவும் நடித்திருப்பார். அதனாலேயே இப்படம் பலராலும் ரசிக்கப்படவில்லை.

ஜக்கம்மா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர், சாவித்திரி ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் கொள்ளை கும்பலால் பாதிக்கப்படும் ஒரு ஊரை காப்பாற்றுபவராக ஜெய்சங்கர் நடித்திருப்பார். ஆனாலும் இந்த திரைப்படத்தில் சில காட்சிகள் பலரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்பு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், அசோகன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் பல கிளாமர் காட்சிகளும், கண்ணை கூச வைக்கும் அளவுக்கு இருக்கும் குளியல் காட்சிகளும் கடும் விமர்சனங்களை பெற்றது. இதன் மூலம் ஜெய்சங்கருக்கும் அவப்பெயர் கிடைத்தது. அந்த வகையில் இந்த மூன்று திரைப்படங்களும் ஜெய்சங்கர் கேரியரில் மோசமான படங்களாக அமைந்துவிட்டது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.