5 Actresses In Mother Roles: இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திரை பிரபலங்கள் அம்மாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இன்றைய நாளை இன்னும் ஸ்பெஷலாக்கி வருகின்றனர்.
அதேபோல் தமிழில் அம்மாவை பற்றிய ஏராளமான பாட்டுகள் வந்திருக்கின்றன. அம்மாவின் பெருமையை போற்றும் படங்களையும் பார்த்திருக்கிறோம்.
அப்படி அம்மா கதாபாத்திரத்திற்கு 10 பொருத்தமும் பக்காவாக பொருந்திய ஐந்து நடிகைகளை பற்றி காண்போம்.
சரண்யா பொன்வண்ணன்: டாப் ஹீரோக்களின் அம்மாவாக நடிக்கணும்னா முதலில் ஞாபகத்துக்கு வருவது இவர்தான். காமெடி சென்டிமென்ட் என இவர் நடிக்காத அம்மா கேரக்டர்களே கிடையாது.
வேலையில்லா பட்டதாரி, ஒரு கல் ஒரு கண்ணாடி, களவாணி, ராம் என பல படங்கள் இருக்கின்றன. அதிலும் களவாணியில் ஆடி போய் ஆவணி வந்தா அவன் டாப்பா வருவான் என வெள்ளந்தி அம்மாவாக இருக்கும் கதாபாத்திரம் அனைவருக்குமே பிடித்தது.
ராதிகா: இவரும் இப்போது அம்மா கேரக்டர்களில் கலக்கி கொண்டிருக்கிறார். ஆனால் இவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். பையனுக்கு மோட்டிவேஷன் கொடுப்பதில் தொடங்கி கலகலப்பான அம்மாவாகவும் இவர் நடித்து வருகிறார்.
ஊர்வசி: என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு உயிர் கொடுத்து விடும் இவருடைய நடிப்பு. சூரரை போற்று படத்தில் எமோஷனல் கலந்த நடிப்பு முதல் வீட்ல விசேஷம் படத்தில் கர்ப்பிணியாக நடித்தது வரை அனைத்துமே இவரை நினைவுபடுத்தும்.
நதியா: இளமையான அம்மா என்றால் இவர்தான். ஹீரோவுக்கு அக்கா போல் இருக்கும் இவர் ரொம்பவும் செலக்ட்டிவான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ரோகிணி: இவரும் அம்மா கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது மட்டும் இல்லாமல் புரட்சிகரமான கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக வேலைக்காரன் படத்தில் இவர் நடிப்பு சிறப்பாக இருந்தது.
இப்படியாக தமிழ் சினிமாவில் முன்னாள் ஹீரோயின்கள் அம்மாவாக கலக்கி கொண்டிருக்கின்றனர்.
அதில் சினேகா, சிம்ரன், லைலா, தேவயானி, மீனா என ஒரு காலத்தில் கனவு கன்னிகளாக இருந்தவர்களும் அம்மா கேரக்டர்களை செலக்ட் செய்ய தொடங்கி விட்டனர்