2025ல் சிறந்த 10 தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ!
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வெற்றியும் புதுமையும் கலந்த ஆண்டாக அமைந்தது. நட்சத்திர நடிகர்கள் முதல் புதிய இயக்குநர்கள் வரை பலரும் தங்களின் திறமையை நிரூபித்தனர். திரையரங்குகள் மட்டுமல்லாமல் OTT தளங்களிலும் இந்த படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன.
2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, தரமான கதைக்களம் கொண்ட சிறு பட்ஜெட் படங்களும் ரசிகர்களின் மனதை வென்று வசூலைக் குவித்துள்ளன. இந்த ஆண்டில் வெளியான டாப் மூவிஸ் இதோ.
சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட படங்களில் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் முதன்மையானது. எதார்த்தமான நகைச்சுவையால் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இப்படம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த வசூல் சாதனை படைத்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
அதேபோல், ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஆண்பாவம் பொல்லாதது, திருமண வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான சிக்கல்களை நகைச்சுவையாகக் கையாண்டு இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மேலும், சித்தார்த், சரத்குமார் மற்றும் தேவயானி கூட்டணியில் வெளியான '3 BHK' திரைப்படம், ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னராக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
அறிமுக இயக்குனர் லோகேஷ் அஜீஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான லெவன் திரைப்படம், ஒரு வித்தியாசமான மிஸ்டரி திரில்லராக அமைந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி (OTT) தளத்திலும் இப்படம் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. அதிரடி மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சக்தித் திருமகன் திரைப்படம், அவரது பாணி திரில்லர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.
இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான பைசன், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு ஆக்ரோஷமான திரைக்கதையால் செதுக்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஹிட் என்றால் அது சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைக் கூறலாம். மிகக் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இப்படம், குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சத்தால் பல மடங்கு லாபத்தை ஈட்டித் தந்தது. மேலும், ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான பறந்து போ திரைப்படம், மிர்ச்சி சிவாவின் டிரேட்மார்க் காமெடியால் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படமும் இளைஞர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக்குவித்தது. விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான சிறை திரைப்படமும் அவரது கரியரில் ஒரு முக்கியமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
