வைரஸ் கதைகளை சிறப்பாக கையாண்ட 5 இயக்குனர்கள்.. விதை போட்ட வேலு பிரபாகரன்

சினிமாவில் பல்வேறு கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் தங்களது நேரத்தை ஒரு நல்ல படத்துடன் செலவிட வேண்டும் என்பதற்காகவே படங்களை பார்க்கின்றனர். அதில் விழிப்புணர்வுடன் இருக்கும் படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு வைரஸ் கதைகளை சிறப்பாகக் கையாண்ட 5 இயக்குனர்களை இப்போது பார்க்கலாம்.

நாளைய மனிதன் : வேலு பிரபாகரன் இயக்கத்தில் 1989ஆம் ஆண்டில் பிரபு, அமலா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நாளைய மனிதன். இப்படத்தில் இறந்தவரின் உடலில் ஆராய்ச்சி மருத்துவர் தான் கண்டுபிடித்த மருந்தை செலுத்துகிறார். அதன்பின் அழிக்க முடியாத சக்தியாக அந்த மனிதன் மாறுகிறார். நாளைய மனிதன் படமே இதன்பின்பு வெளியான வைரஸ் படங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது.

தசாவதாரம் : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் 10 கெட்டப்பில் நடித்த அசத்திய படம் தசாவதாரம். இப்படம் 2004 சுனாமி உடன் தொடர்புடைய கதை அம்சத்தை கொண்டிருந்தது. நாட்டையே அழிக்கும் சக்திகொண்ட விஷக்கிருமியான வைரத்தை தீவிரவாதிகளின் கைகளுக்கு சிக்காமல் அழிப்பது தான் தசாவதாரம் படத்தின் கதை.

ஏழாம் அறிவு : ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் வைரஸ் தொற்றால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். அப்போது அறிவியல் ஆராய்ச்சி மூலம் அதை எப்படித் தடுக்கிறார்கள் என்பது ஏழாம் அறிவு படத்தின் கதை. கொரோனா காலகட்டத்தில் இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

வாயை மூடி பேசவும் : பாலாஜி மோகன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நடிப்பில் வெளியான திரைப்படம் வாயை மூடி பேசவும். பனிமலை பிரதேசத்தில் வாயை திறந்து பேசினால் நோய் பரவுகிறது. இதனால் அரசே யாரும் வாயைத் திறந்து பேச கூடாது என உத்தரவிடுகிறது. அப்போது துல்கர் சல்மான், நஸ்ரியா இடையே எப்படி காதலை பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.

மிருதன் : சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் மிருதன். இப்படத்தில் மனிதனின் மூளையில் மிருகவெறியை தூண்டிவிட்டு உடலை உருக்குலைத்து கோரமாகி அடுத்தவர்களை கடிக்க வைக்கும் அதிபயங்கர வைரஸை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் எடுத்திருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →