டாப் ஹீரோக்கள் மூன்று வேடங்களில் நடித்தும் ஓடாத 5 படங்கள்.. லாஜிக்கில் கோட்ட விட்ட சூர்யா
டாப் ஹீரோக்கள் மூன்று கெட்டப்பில் நடித்த ஐந்து படங்கள்.
Top Actors 5 movies with triple roles that didn't work: முன்னணி நடிகர்கள் தங்களுடைய நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டும் என ஒரே படத்தில் நிறைய கெட்டப்பில் நடித்து ரசிகர்களை பரவசமூட்ட நினைப்பார்கள். அப்படி தான் முக்கியமான ஐந்து ஹீரோக்கள் மூன்று கெட்டப்பில் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடாமல் போனது. சிவாஜி: 1962 இல் செவாலியர் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த நகைச்சுவை திரைப்படம் தான் பலே பாண்டியா. இந்த படத்தில் பாண்டியா, மருது, சங்கர் என்ற மூன்று வேடங்களில் சிவாஜி நடித்து அசத்தினார். அதேபோல் இதில் ராதாவும் இரட்டை வேடத்தில் நடித்து சிவாஜிக்கு டஃப் கொடுத்தார். பக்கா காமெடி ஜானரில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் வசூலில் மண்ணை கவ்வியது. விஜயகாந்த்: ஈஸ்வரன் இயக்கத்தில் விஜயகாந்த், குஷ்பூ, ராதாரவி, அம்பிகா, செந்தில் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் சிம்மாசனம். இந்த படத்தில் விஜயகாந்த் தந்தையாக சத்தியமூர்த்தி மற்றும் இரண்டு மகன்கள் ஆக சக்திவேல், தங்கராசு என மூன்று கெட்டப்பில் நடித்தார். இதில் ஏழைகளுக்கு பல உதவிகளை செய்த சத்தியமூர்த்தியை ஜமீன்தார் தம்பிதுரை கொலை செய்துவிட்டு அந்த பழியை சத்தியமூர்த்தியின் இரண்டாவது மனைவியின் மீது போட்டு விடுவார். கடைசியில் சத்தியமூர்த்தியின் இரண்டு மகன்கள் ஆன சக்திவேல் மற்றும் தங்கராசு இருவரும் அந்த உண்மையை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை. என்னதான் இதில் கேப்டன் மூன்று வேடங்களில் நடித்திருந்தாலும், சிம்மாசனம் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது.

