இந்த அஞ்சு படங்கள பார்த்தா குந்தவைய வெறுத்துடுவீங்க! ஆவியா அலைந்த மோகினி திரிஷா
திரிஷாவை இந்த ஐந்து படங்களில் பார்க்க சுத்தமாகவே பிடிக்காது.
Acress Trisha: 40 வயதில் இம்புட்டு அழகா! என இளசுகள் வாயை பிளக்கும் அளவுக்கு தற்சமயம் கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் முன்பை விட பேரழகியாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் தோன்றினார். அதன் பின்பு இப்போது விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி என தொடர்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போடுகிறார். இருப்பினும் திரிஷா நடித்த ஐந்து படங்களில் அவரை பார்க்க சகிக்காது. அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்களைப் பற்றி பார்ப்போம். நாயகி: காயத்ரியாக அபரிவிதமான அழகோடு இந்த படத்தின் தொடக்கத்தில் என்ட்ரி கொடுத்த திரிஷா, அதன்பின் படம் முழுக்க ஆவியாகவும் சினிமா ஆசையில் சீரழிந்த பெண்ணாக தன்னுடைய கொடூரமான முகத்தை காட்டி அலற விட்டார். கதை மற்றும் காட்சியமைப்பின்படி திரிஷா இறந்து போவதும் ஆவியாய் நடமாடுவதை படம் முழுக்க பார்க்கவே முடியவில்லை. மோகினி: திரிஷா இரட்டை வேடத்தில் நடித்த திரில்லர் திரைப்படம் தான் மோகினி. இதில் ஆவியாக சுற்றி திரிந்து பின்பு திரிஷாவின் உடம்பில் புகுந்து தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கும் வழக்கமான பேய் கதை தான் இந்த மோகினி திரைப்படமும். ஆவியாக அலைந்த மோகினி தனக்கென ஒரு உடம்பு கிடைத்ததும் அதில் புகுந்து தன்னைக் கொன்றவர்களை தும்சம் செய்கிறார். சாந்தமாக பார்த்த திரிஷாவை இதில் கொடூரமாக பார்ப்பதற்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. ராங்கி: படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப திரிஷா இதில் ராங்கி தனமாக தான் நடித்திருந்தார். இதில் தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினாலும் அவருக்கென்றே இருந்த கியூட்னஸ் காணாமல் போனது. இதில் சமூக ஊடகங்களின் மூலம் இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் சர்வதேச எண்ணெய் வள அரசியலையும் தொடர்புப்படுத்தி கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது. சகலகலா வல்லவன்: ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் திரிஷா, அஞ்சலி இருவரும் கதாநாயகிகளாக நடித்தனர். ஜெயம் ரவி முதலில் அஞ்சலியை காதலித்து பின் சந்தர்ப்ப சூழ்நிலையால் திரிஷாவை திருமணம் செய்து கொள்வார். ஆனால் திரிஷா அந்த திருமண உறவில் இருந்து வெளிவர பார்ப்பார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிப்பார்கள். இந்த படத்தில் திரிஷாவின் நடிப்பு அவ்வளவாக எடுபடவில்லை. தி ரோடு: க்ரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் விவரிக்க முடியாத விபத்துகளை மையப்படுத்தி படத்தின் கதையை அமைத்தனர். இதில் திரிஷாவின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக பார்த்த திரிஷாவை இந்த படத்தில் பார்ப்பதற்கே ரொம்பவே வித்தியாசமாக தெரிந்தது.
