நடிகர் முரளி கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் தான் கோலிவுட் என்ட்ரி கொடுத்தார். முரளிக்கு பொதுவாக பெண் ரசிகைகள் அதிகம். அதற்கு காரணம் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் எனலாம். ஒரு தலை காதலில் உருகும் காதலனாக, பாசத்தில் மிளிரும் சகோதரனாக முரளி திரையில் வாழ்ந்து வந்தார் என்றே சொல்லலாம். முரளியின் சிறந்த 5 குடும்ப திரைப்படங்கள்,
ஆனந்தம்: ஆனந்தம் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான படம். இந்த படத்தில் மம்மூட்டி, தேவயானி, முரளி, ரம்பா, அப்பாஸ், ஸ்னேகா, ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படத்தில் முரளி எந்த சூழ்நிலையிலும் அண்ணனின் மீதான அன்பில் இருந்து மாறாத, குடும்பத்தை விட்டு நீங்காத ஒரு நல்ல சகோதரனாக நடித்திருந்தார்.
சமுத்திரம்: சூப்பர் குட் பிலிம்ஸின் சிறந்த குடும்ப படங்களில் இதுவும் ஒன்று. தங்கையின் மீது அதிக அன்பு கொண்ட, தங்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அண்ணன்களில் ஒருவராக முரளி நடித்திருப்பார். இந்த படத்தில் முரளியுடன், சரத்குமார், அபிராமி, மனோஜ், மோனால், கவுண்டமணி, செந்தில், மணிவண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
வெற்றிகொடிக்கட்டு: வெற்றிகொடிக்கட்டு படத்தில் வெளிநாட்டில் வேலை செய்ய பணம் கட்டி ஏமாந்து போகும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக முரளி நடித்திருந்தார். மூன்று தங்கைகளுக்கு அண்ணனாக, அம்மாவின் மீது அளவில்லா அன்பு கொண்ட மகனாக பார்ப்பவர்கள் நெஞ்சை கலங்கடித்து இருப்பார்.
பொற்காலம்: பொற்காலம் முரளியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த படத்தில் முரளி மண்பானை செய்யும் குயவனாக நடித்தார். வாய் பேச முடியாத தன் தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க போராடும் அண்ணனாக முரளி இதில் நடித்தார்.
காமராசு: காமராசு திரைப்படத்தில் முரளி கை, கால்கள் விழுந்த தன்னுடைய தாயை அன்பாக பார்த்து கொள்ளும் மகனாக நடித்திருப்பார். இவருடைய காதலியான லைலா இறந்து போகும் காட்சியிலும், அவருடைய அம்மா இறந்த காட்சியிலும் முரளி படம் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து இருப்பார்.