ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

ரஜினியால் தான் எந்திரன் 2 ஓடல.. இந்தியன் 2க்கு ஷங்கர் சொல்லும் காரணமே வேற

Indian 2: கிட்டத்தட்ட லஞ்சம் என்ற ஒரு வரியை வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்தியன் படம். அதன் இரண்டாம் பாகம் 28 வருடங்கள் கழித்து மீண்டும் ஜூலை 12 ரிலீஸ் ஆக உள்ளது. இவ்வளவு ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இப்பொழுது மக்களை ஈர்க்குமா என்பதுதான் அனைவரது கேள்வி.

இதேபோல் தான் ஷங்கர் எந்திரன் 2 ரஜினியை வைத்து எடுத்தார் ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இந்தியன் 2 படமும் ஆகிவிடுமோ என்பது பல ரசிகர்களின் அச்சமாக இருக்கிறது.

ரஜினியால் தான் எந்திரன் 2 ஓடல

ரஜினியை வைத்து எடுத்த எந்திரன் 2 படம் மக்களை ஈர்க்காமல் போனதற்கு அப்பவே பல காரணங்களை கூறினார் ஷங்கர். இந்த படத்தை ரஜினியை வைத்து எடுக்க திட்டமிட்டது தான் அவர் செய்த பெரிய தவறு என்றும் சொல்லிவிட்டார்.

எந்திரன் 2 படம் பாதி எடுக்கப்பட்ட நிலையில் ரஜினியால் ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை. வயது மூப்பு மற்றும் உடல் ஒத்துழைக்காமல் ரஜினி அவதிப்பட்டு உள்ளார். அதனால் ஷங்கரை கூப்பிட்டு நீங்கள் இதுவரை எடுத்த காட்சிகளின் செலவுகளை எல்லாம் நான் கொடுத்து விடுகிறேன். என் உடல் பிரச்சினை காரணமாக உங்கள் கதைக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார்.

அதனால் ஷங்கர் ரஜினிக்காகவே எந்திரன் 2 கதையை முழுவதுமாக மாற்றிவிட்டார். அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. ஆனால் இந்தியன் 2 வேறு மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அனைவரையும் கவரும் என்று அடித்துக் கூறுகிறார் ஷங்கர்.

இந்தியன் 2க்கு ஷங்கர் சொல்லும் காரணமே வேற

இந்தியன்2 வில் இந்த வயதிலும் கமல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். நடிப்பின் உச்சத்தை இந்த படத்தில் கமலஹாசன் காட்டியதாகவும், மீண்டும் நான் கலைத்துறையின் உலகநாயகன் என நிரூபித்து விட்டார். இந்த படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு மக்கள் கொண்டாடுவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார் ஷங்கர்.

Trending News