புதன்கிழமை, ஜனவரி 8, 2025

விஜய் அரசியல் எண்ட்ரி, ஜேசன் சஞ்சய் சினிமா எண்ட்ரி! முதல் பட ஹீரோ இவர்தான், எகிறும் எதிர்பார்ப்பு

சினிமாவில் இருந்தாலும், சினிமா பிரபலங்களின் வாரிசுகளாகவே இருந்தாலும் அத்தனை எளிதியில் சிலருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சிலருக்கு வாய்ப்புகள் கிடைத்த பின் அதைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. சிலர் கிடைத்த வாய்ப்புகளைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயரே செல்வர்.

இதையெல்லாம் நாம் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு அறிமுகம் தேவையில்லை. ஏற்கனவே வேட்டைக்காரன், போக்கிரி படத்திலும் நடனம் ஆடி சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், தொழில் ரீதியாக அவர் முதல் படத்தில் நடிப்பாரா? அல்லது இயக்குனராக அறிமுகமாவாரா என கேள்வி எழுந்தது. தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் தான் நடித்ததால் வாரிசு முத்திரை தனக்கு விழுந்த மாதிரி தன் மகனுக்கு விழுந்துவிடக் கூடாது என்பதில் விஜய் தீவிரமாக இருந்ததால் வாய்ப்பு தள்ளிப் போனதாக தெரிகிறது.

விஜய் அரசியலில் எண்ட்ரி, ஜேசன் சஞ்சய் சினிமா எண்ட்ரி!

ஆனால் முறைப்படி, கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பு முடித்திவிட்டு சென்னை திரும்பியவர் சில ஷார்ட் பிலிம்களும் இயக்கி கவனம் பெற்றார். அடுத்து இவர் என்ன படம் இயக்கப் போகிறார்? யார் தயாரிக்கப் போகிறார்? எனக் கேள்வி எழுந்த நிலையில், லைகா ஜேசன் சஞ்சயின் படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்து, அவரை இயக்குனராக அறிமுகப்படுத்த ஒப்பந்தம் போட்டது.

இது நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில், எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. இப்படத்தைப் பற்றி பல்வேறு யூகங்களும் வெளியாகின. இந்த நிலையில், லைகா தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் தயாரிக்கும் புதிய படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த வீடியோவில், பணம் குவிந்து கிடக்கும் ஷாட் காட்டப்படும் நிலையி பணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகலாம் எனத் தெரிகிறது. இப்படத்திகு பிரவீன் கே.எல். இசையமைக்கிறார். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விஜய் அரசியலில் எண்ட்ரி ஆகி தவெக தலைவராக உருவெடுத்து சினிமாவில் இருந்து விலகிய நிலையில், அவர் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jason Sanjay - Sundeep Kishan
Jason Sanjay – Sundeep Kishan

Trending News