புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லியோ படத்தில் மொக்கை வாங்கிய 4 கேரக்டர்கள்.. பெரிய முதலைகளை கூட்டி வந்து பங்கம் பண்ணிய லோகேஷ்

Leo Movie: தளபதி விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்தப் படத்தில் தேவை இல்லாமல் ஒன்னு ரெண்டு சீனுக்கு மட்டுமே வந்து மொக்கை வாங்கிய நான்கு கேரக்டர்களை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

இதில் வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின் என அடுத்தடுத்து விஜய்யுடன் மோதியுள்ளனர். இந்தப் படத்தில் ஹீரோவின் மதிப்பை கூட்ட வேண்டும் என்றே வில்லன்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒன்னு ரெண்டு காட்சிகளில் மட்டுமே என்ட்ரி கொடுத்து நான்கு பெரிய முதலைகளை கூட்டிட்டு வந்து லோகேஷ் அசிங்கப்படுத்தி விட்டார்.

இதில் அனுராக் காஷ்யப் ‘டேனியல்’ என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் மிகப்பெரிய வில்லனாக பார்க்கப்பட்ட இவர் இந்த படத்தில் தேவையில்லாத ஆணி தான். எதற்கு படத்தில் வந்தார்னே தெரியல. அவரைத் தொடர்ந்து விஜய்யின் அப்பாவாக ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்திருக்கிறார்.

எவ்வளவு பெரிய நடிகர் சஞ்சய் தத், அவருக்கு இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் காட்சிகளை வைத்திருக்கலாம். ஆனால் ஒன்னு ரெண்டு சீன் மட்டுமே கொடுத்திருக்கின்றனர். இருப்பினும் விஜய் உடன் சஞ்சய் தத் சண்டை போடும் காட்சி அதிரடி சரவெடியாக இருந்தது. மேலும் ‘நா ரெடி’ பாடல் வெளியான போதே விஜய் உடன் கூட்டாளியாக மன்சூர் அலிகான் நடித்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விட்டோம்.

இவர் விஜய்யின் நம்பிக்கை கூறிய நண்பராக இருதயராஜ் டிசோசா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருக்கும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெருசா சீன் ஒன்னும் இல்ல. நான்காவதாக மிஸ்கினை ஆள் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே லோகேஷ் நடிக்க வச்சிருக்காரு. சும்மா ஒரு சீன் ரெண்டு சீன் நடிப்பதற்கு நிறைய ஆர்டிஸ்ட் தேவையே இல்ல.

அதிலும் திரையுலகில் பெரிய முதலைகளாக இருக்கக்கூடிய இந்த நான்கு பேரையும் கூட்டி வந்து லோகேஷ் பங்கம் செய்துவிட்டார். இவர்கள் எல்லாம் இந்த படத்தில் இருக்கிறார்கள் எனத் தெரிந்து ஆர்வத்துடன் வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

Trending News