ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

கையில் இருந்த மேட்ச் நழுவி போனது எப்படி தெரியுமா.? அதிர்ச்சியில் இருந்து மீளாமல் மார்கன் அண்ட் கோ!

ஐபிஎல் 2021 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கத்தாவிற்கும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

இந்த மைதானத்தில் சேசிங் செய்வது எளிது என்பதால் கொல்கத்தா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே மும்பை அணியின் ரன் விகிதத்தை கட்டுப்படுத்தியது கொல்கத்தா, சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து அபாரமாக பந்து வீசியது.

தொடக்கத்திலேயே டிகாக் விக்கெட்டை இழந்தது மும்பை அணி. அதன்பின் ரோஹித் மற்றும் சூரியகுமார்  இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினார்கள். இதில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக 56 ரன்கள் எடுத்தார், ரோஹித் நிதானமாக 43 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணி  இறுதியில் 20 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 152 ரன்களை மட்டும் எடுத்தது. பின் எளிதான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதையடுத்து கொல்கத்தா அணி  தனது இன்னிங்சை தொடங்கியது ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டியது. கில் அதிரடியாக 24 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ராணா தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டி 47 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று  57 ரன்கள் எடுத்தார்.

முழுவதுமாக  ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்த கொல்கத்தா அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் வந்த வீரர்கள் அனைவரும் உடனே அவுட் ஆனார்கள். தினேஷ் கார்த்திக்கும், ரசூலும் இறுதிவரை களத்தில் நின்றும் கூட வெற்றி அடையவில்லை, காரணம் மும்பையின் அந்த 4 ஓவர்கள்.

Bowlerskkr-Cinemapettai.jpg
Bowlerskkr-Cinemapettai.jpg

கடைசி 4 ஓவர்களை வீசிய டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குர்னால் பாண்டியா மும்பையை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -spot_img

Trending News