வீரேந்திர சேவாக்கிடம் வாயைக் கொடுத்து மொக்கை வாங்கிய 5 பிரபலங்கள்.. கிரிக்கெட் வாழ்க்கையில் நடத்த சுவாரசியமான சம்பவம்

வீரேந்திர சேவாக் இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர். முதல் பதில் இருந்து கடைசி பந்து வரை சிக்சர் மற்றும் பவுண்டரிகளை எதிர்பார்க்கும் வீரர் சேவாக். எப்பொழுதுமே எதிரணி பவுலர்கள் கண்டு நடுங்கும் ஒரு பயம் அறியா அதிரடி ஆட்டக்காரர். சோயப் அக்தர், பிரட் லீ, ஷான் பொல்லாக், வாசிம் அக்ரம், போன்ற நட்சத்திர பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சேவாக்.

இவர் கேப்டன் சவுரவ் கங்குலியின் படைப்பு. ஒரு காலகட்டத்தில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கங்குலி, இவரின் அதிரடி ஆட்டத்தை பார்த்து தான் இறங்க வேண்டிய இடத்தில், சேவாக்கை இறங்கச் செய்து அவரது திறமையை வெளிக்கொண்டு வந்தார்.

Viru-Cinemapettai.jpg
Viru-Cinemapettai.jpg

எப்பொழுதுமே சமூகவலைத்தளங்களில்ஆக்டிவாக இருக்கும் விரேந்திர சேவாக்கை பலரும் வம்புக்கு இழுப்பது உண்டு. அப்படி வம்பிழுத்தவர்களை சேவாக்கும் ஒரு கை பார்த்து விடுவார்.

சேவாக்கை பற்றி ஜெப்ரி பாய்காட்: ஒருமுறை விரேந்திர சேவாக்கை மூளை இல்லாத பேட்ஸ்மேன் என்று வர்ணனையாளர் ஜெப்ரி பாய்காட் குறிப்பிட்டிருந்தார். அதற்கு சேவாக் ஒரு நாள் முழுவதும் களத்தில் நின்று ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த வீரர் ஜெப்ரி பாய்காட். அவருக்கு நிறைய மூளை உண்டு என தக்க பதிலடி கொடுத்தார்.

Boycott-Cinemapettai.jpg
Boycott-Cinemapettai.jpg

வம்பிழுத்த பத்திரிக்கையாளர்: பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் சச்சின் மாறியே விளையாடுகிறீர்கள் அவருடைய “cloning”ஆ நீங்கள் என்று கேட்டார். அதற்கு விரேந்திர சேவாக் குறும்பாக சச்சின் ஒரு “bank balance” என்று பதில் சொல்லி அந்த பத்திரிக்கையாளரை கலாய்த்தார்.

Press-Shewaq-Cinemapettai.jpg
Press-Shewaq-Cinemapettai.jpg

வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிற்கு சேவாக் கொடுத்த பதில்: போக்லே ஒரு முறை சேவாக் இடம் நீங்கள் எப்படி எல்லா பவுலர்களையும் பயமில்லாமல் சந்திக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு நான் பவுலர்களை பார்க்கவில்லை, பந்தை மட்டும் தான் பார்க்கிறேன் என்று தன் பாணியில் பதிலடி கொடுத்தார்.

Harsha-Cinemapettai.jpg
Harsha-Cinemapettai.jpg

சேவாக், அப்துல் ரசாக்கிற்கு கொடுத்த பதிலடி: ஒருமுறை கவுண்டி கிரிக்கெட்டில் பழைய பந்து ஒன்றில் அப்துல் ரசாக் அருமையாக சுவிங் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது சேவாக்கிற்கு எதிரே நிற்கும் வீரர் இந்தப் பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது, நாம் கவனித்து விளையாட வேண்டும் என அறிவுறுத்தினார். அதற்கு சேவாக், அடுத்த பந்தை மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்து தொலைத்து விட்டாராம். உடனே எதிரே நிற்கும் வீரரிடம் இனி வரும் பந்தில் நமக்கு பிரச்சினை இல்லை என்று சொல்லி ரசாக்கின் சுவிங் பந்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.

Razzaq-Cinemapettai.jpg
Razzaq-Cinemapettai.jpg

சேவாக், மைக்கேல் ஆர்தர்டனுக்கு கொடுத்த பதில்: ஒருமுறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 195 ரன்களில் விரேந்திர சேவாக் அவுட்டானார். போட்டி முடிந்த பின் ஆர்தர்டன், சேவாக்யிடம் நீங்கள் ஆவேசமாக விளையாடி 200 ரன்களை தவிர விட்டீர்கள் என்று சொன்னதற்கு 3 அடியில் ஆறு ரன்களை தவற விட்டுவிட்டேன் என்று பதிலடி கொடுத்தாராம்.

Michael-Cinemapettai.jpg
Michael-Cinemapettai.jpg
Advertisement Amazon Prime Banner