வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

இலவச வாஷிங் மிஷின், LED டிவி, பைக்.. தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட எடப்பாடியார்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக அரசு பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் பல்வேறு நலத்திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக ஆண்டிற்கு எரிவாயு சிலிண்டர் 6 இலவசமாக வழங்கப்படும்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து இல்லங்களின் பொருளாதார நிலையை சரி செய்யும் வகையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,500 வழங்கப்படும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 24 இன்ச் LED டிவி அல்லது வாஷிங் மெஷின் வழங்கப்படும்.  தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 20 சதவீத மானியமும் வழங்கப்படும்.

eps

அத்துடன் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் மாணவர்களுக்கு லேப், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டாப் வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போனும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தனது தேர்தல் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

Trending News