செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி.. பச்சோந்தி உடன் வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தற்போது சினிமாவைவிட யூடியூபில் நடிப்பவர்கள் வெகுபிரபலமாகி வருகின்றனர். பல யூடியூப் சேனல்கள் இருந்தாலும் இளைஞர்களுக்கு ஃபேவரிட் என்றால் அது எரும சாணி சேனல் தான். யதார்த்தமாக இன்றைய கால நடைமுறையை காமெடியாக சொல்லி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டவர்கள்.

யூடியூபில் இருந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி படத்தின் மூலம் காமெடியனாக திரையில் அறியப்பட்டவர் விஜய். நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களின் கைத்தட்டல் பெற்றவர். அதுமட்டுமில்லாமல் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் எருமசாணி புகழ் விஜய் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த கதையில் பிரபல நடிகர் அருள்நிதி நடிக்கிறார்.

அருமையான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவரான அருள்நிதி இந்த படத்தில் நடிக்க இருப்பதால் இப்போது இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

அருள்நிதி மற்றும் எருமசாணி விஜய் இணையும் படத்திற்கு D பிளாக் என பெயர் வைத்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மேலும் காமெடி நடிகராக வலம் வந்த விஜய் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

D-block-first-look
D-block-first-look

Trending News