திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கோபியின் கோபத்தால் முதியோர் இல்லத்திற்கு கிளம்பிய ஈஸ்வரி.. குதூகலத்தில் கொண்டாடும் ராதிகாவின் அம்மா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், யானை தன் தலையிலே மண்ணை வாரி போடும் என்று சொல்வதற்கு ஏற்ப கோபி, அம்மாவை ராதிகா கூட்டிட்டு வந்ததால் தற்போது அல்லல் படுகிறார். அதாவது பாக்கியா வீட்டில் அதிகாரம் பண்ணிட்டு வந்த ஈஸ்வரி, ராதிகா வீட்டிற்கு வந்த பிறகும் அதே மாதிரி தெனாவட்டு காட்டுகிறார்.

ஆனால் அங்கே இருக்கும் ராதிகாவின் அம்மாவிற்கு பிடிக்காததால் ஈஸ்வரியை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று சூழ்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் ஈஸ்வரி ஒன்று பேசினால் அதை டபுளாக பேசி பிரச்சினையை பெருசாக்குகிறது. இந்த ஈஸ்வரியும் எதற்கெடுத்தாலும் கோபிக்கு அடிக்கடி போன் பண்ணி தொந்தரவு கொடுத்து வருகிறார்.

அம்மாவிடம் கோபத்தை காட்டிய கோபி

இதனால் கோபிக்கு ஹோட்டலையும் சரியாக பார்க்க முடியாமல் அம்மாவின் டார்ச்சரையும் தாங்க முடியாமல் டென்ஷன் ஆகிவிட்டார். அந்த டென்ஷனில் வீட்டுக்கு வந்தபோது மறுபடியும் ஈஸ்வரி, ராதிகா, அவருடைய அம்மா அனைவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கோபி கோபமாக அம்மாவை திட்டி விடுகிறார்.

அதாவது என்னுடைய பிசினஸ் லாஸ் ஆகிவிட்டது. அடுத்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்த பொழுது இந்த ஹோட்டல் பிசினஸை ஆரம்பித்து இப்பொழுதுதான் ஓரளவுக்கு கையில் பணம் வருகிறது. ஆனால் நீங்கள் பண்ணும் டார்ச்சரால் என்னால் வேலையை சரியாக பண்ண முடியவில்லை. வீட்டிற்கு வந்தாலும் நிம்மதி இல்லை என்று கொஞ்சம் கோபமாக பேசி விடுகிறார்.

இதனால் ஈஸ்வரி, நான் உன்னை நம்பி வந்ததுக்கு எனக்கு இதுக்கு மேலயும் வேணும் இன்னமும் வேணும் என்று சொல்லி நான் முதியோர் இல்லத்திற்கு கிளம்புகிறேன் என்று பெட்டி படுக்கையை எடுத்து விட்டார். ஏன் என்றால் பாக்யா வீட்டிற்கும் போக முடியாது. உன்னுடைய அப்பா எவ்வளவோ சொன்னாங்க, கோபியை நம்பி போகாதே என்று. நான் அதெல்லாம் கேட்காமல் நீ கூப்பிட்டதும் உன் பின்னாடி வந்ததற்கு எனக்கு வேணும் என்று அழுது டிராமா பண்ணுகிறார்.

இதை பார்த்து கோபி மனம் கலங்கி அம்மாவை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார். இதனை அடுத்து பாக்கியாவிற்கு பழனிச்சாமி பக்கத்தில் பார் ஷாப்பிலிருந்து சமைக்கும் ஆர்டரை வாங்கி கொடுக்கிறார். ஆனால் அவர்களால் ஏதாவது தொந்தரவு வந்து விடுமோ என்ற பயத்தில் பாக்யா ஹோட்டலில் வேலை பார்க்கும் பெண்கள் அனைவரும் பயத்துடன் இருக்கிறார்கள்.

அந்த மாதிரி எதுவும் வராது என்று பழனிச்சாமி மற்றும் பாக்யாவும் நம்பிக்கையுடன் இன்று அவர்களுடைய ஆர்டரை செய்யப் போகிறார்கள். அடுத்ததாக கோபியும் ஹோட்டலுக்கு கிளம்புகிறேன் என்று அம்மாவிடம் சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி நீ போயிட்டு வா, இனி நான் உனக்கு போன் பண்ணி எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன். அவர்கள் என்னை என்ன வேணாலும் பண்ணாலும் நான் உனக்கு சொல்ல மாட்டேன் என்று மறுபடியும் சீன் போடுகிறார்.

உடனே கோபி அதெல்லாம் இல்லமா நீங்க எப்ப நாளும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க, என்று அம்மாவுக்கு காபி கொடுத்துவிட்டு கிளம்புகிறார். போகும்போது ராதிகாவிடம் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். ஆனால் ஈஸ்வரி தற்போது வீட்டை விட்டுப் போக வேண்டும் என்ற மனநிலைமையில் வந்ததால் இனி கொஞ்சம் குடைச்சல் கொடுத்தாலே போதும். கூடிய சீக்கிரமே வீட்டை விட்டு போய்விடுவார் என்ற குஷியில் ராதிகாவின் அம்மா அடுத்த கட்ட டார்ச்சரை பண்ணப் போகிறார்.

கோபி மத்தளம் போல அடி வாங்கும் சம்பவங்கள்

Trending News