சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலில் 4 பெண்களுடன் கூட்டணி சேர்ந்த ஈஸ்வரியின் மருமகள்.. ஜனனியின் ஐடியா,தர்ஷனுக்கு வச்ச ஆப்பு

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் ஜெயிலில் இருந்து வெளியே வந்தாலும் வீட்டில் இருப்பவர்கள் நமக்கு சப்போர்ட் பண்ணி நம் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று கதிர் பிளான் பண்ணி விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி தர்ஷன் ஆதிரை விசாலாட்சி ஞானம் என்று அனைவரது மனதையும் மாற்றி விட்டார். அதனால் இனி குணசேகரன் வெளியே வந்தாலும் டம்மி பீஸ் தான் என்பதற்கு ஏற்ப கதிர் பக்கவாக காய் நகர்த்தி விட்டார்.

இதையெல்லாம் புரிந்து கொண்ட ஜனனி, கதிரின் உண்மையான முகத்தை வெளியே காட்ட வேண்டும் என்பதற்கு தயாராகி விட்டார். ஆனால் அடாவடித்தனமாக பேசும் குணசேகரனை விட கமுக்கமாக காரியத்தை சாதித்து சைக்கோ தனமான வேலைகளை பார்க்கும் கதிர் ரொம்பவே மோசமானவராக தான் இருக்கிறார். அதற்கேற்ற மாதிரி தற்போது அறிவுக்கரசி கூட்டமும் ஒன்று சேர்ந்ததால் கதையின் ட்ராக் மாறிவிட்டது.

முக்கியமாக கதையின் படி பெண்கள் வீட்டிலும் வெளியே போகும் இடத்தில் வரும் பிரச்சினைகளை சமாளித்து அவர்கள் நினைக்கும் லட்சியத்தை எப்படி அடைகிறார்கள் என்பதை காட்ட வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த விஷயங்களை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு சம்பந்தமே இல்லாமல் கதைகளையும் காட்சிகளையும் எடுத்து எதிர்நீச்சல் பெயரையே டேமேஜ் பண்ணி விட்டார்கள்.

இப்படித்தான் ஆதிரைக்கு பிடிக்காத கல்யாணத்தை கரிகாலன் உடன் நடத்தி வைத்தார். பின்பு ஆதிரை கரிகாலன் உடன் வாழ முடியாது என்று அருண் வீட்டிற்கு போய்விட்டார். அத்துடன் குணசேகரன் மீதும் புகார் கொடுத்துவிட்டு நான்கு பெண்களுக்கு சப்போட்டாக ஆதிரை இருந்தார். ஆனால் இப்பொழுது ஆதிரை கேரக்டர் டேமேஜ் ஆகிவிட்டது என்பதற்கு ஏற்ப மொத்தமாகவே சொத்துக்காக கதிர் பேச்சை கேட்டு ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார்.

இதில் ஞானமும் ஒன்று சேர்ந்து விட்டார் என்பதற்கு ஏற்ப ரேணுகாவிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார். இதையெல்லாம் தாண்டி தர்ஷன் கல்யாணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று அறிவுக்கரசி தர்ஷன் கதிர் மற்றும் ஞானத்தை கூட்டிட்டு பேசுகிறார். இந்த சூழ்நிலையில் தர்ஷனை காதலித்த பெண் தர்ஷன் இடம் பேசி பார்க்கலாம் என்று வீட்டிற்கு வருகிறார்.

அப்பொழுது தர்ஷன் அந்தப் பெண்ணை ஏமாற்றிய விஷயத்தை நான்கு பெண்களும் தெரிந்து கொள்கிறார்கள். உடனே ஜனனி ஐடியா பண்ணி இந்த பெண்ணை வைத்து தர்ஷனை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப ஆப்பு வைத்து விட்டார். அதன்படி தர்ஷனுக்கு போன் பண்ணி அந்த பொண்ணு நான் உன் வீட்டு வாசலில் தான் இருக்கிறேன். உன்னிடம் பேசிவிட்டு போய்விடுவேன் நீ யாரையும் கூட்டிட்டு வராமல் தனியாக வா என்று கூப்பிடுகிறார்.

இப்படி சொல்லி தர்ஷனை வர வைக்க ஐடியா கொடுத்தது ஜனனி தான். அந்த வகையில் அஞ்சனா கல்யாணம் மாதிரி தர்ஷனுக்கும் அந்த காதலித்த பெண்ணுக்கும் நான்கு பெண்களும் கல்யாணத்தை பண்ணி வைத்து அறிவுக்கரசியும் குணசேகரனையும் தோற்கடித்து கதிர் முகத்தில் கரியை பூசி விடுவார்கள்.

Trending News