புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நரகமான வாழ்க்கை, குணசேகரனை போல பல பேர் உண்டு.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த எதிர்நீச்சல் நடிகை

Ethir Neechal : சன் டிவியில் பிரபல தொடரான எதிர்நீச்சல் இப்போது டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த தொடரில் உள்ள பிரபலங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. அவர்களைப் பற்றிய சொந்த விஷயங்களை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அவ்வாறு எதிர்நீச்சல் தொடரில் உள்ள நடிகை ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். எதிர்நீச்சல் தொடரின் தூணாக இருப்பது நான்கு மருமகள்கள் தான்.

அதில் மூன்றாவது மகளாக நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹரிப்பிரியா. 2012 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த விக்னேஷ் என்பவரை ஹரிப்பிரியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் நடித்திருந்தனர்.

விக்னேஷை பிரிந்த ஹரிப்ரியா

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் மனகசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஹரிப்பிரியா எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்தை விட கொடூரமான பல பேர் உள்ளனர்.

வாழ்க்கையில் கசப்பான அனுபவம் மற்றும் பிடிக்காத உறவு என சில காலகட்டத்திற்கு பின் அமையும். அதையும் மன தைரியத்துடன் கடந்து தான் வர வேண்டும். மேலும் என்னுடைய நேரத்தை தனிமையில் தான் செலவிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

சீரியலை போல தான் நிஜ வாழ்க்கையிலும் சில கரடு முரடான நபர்கள் உள்ளனர். மேலும் ஹரிப்பிரியாவின் வாழ்க்கையில் பல கஷ்டமான சம்பவங்கள் இருந்தாலும் சின்னத்திரை மூலம் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.

Trending News