புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜய் டிவியில் தொடங்கும் எதிர்நீச்சல் 2.. விட்ட குறை தொட்ட குறையாக கனவை நிறைவேற்ற வரும் ஜனனி

Vijay Tv Serial: கடந்த வருடம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலை ஆஹா ஓஹோ என்று ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடினார்கள். அதற்கு காரணம் சொந்தக் காலில் நின்னு லட்சியத்தை ஜெயிக்க வேண்டும் என்று கனவோட இருக்கும் பெண்களின் லட்சியம் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது. அதற்கு என்னென்ன இடைஞ்சல்கள் யார் குறுக்கே வருகிறார்கள் என்பதை காட்டும் விதமாக கதை அமைந்திருந்தது.

ஆனால் அந்த ட்ராக் அப்படியே மாறி கதையிலிருந்து கொஞ்சம் திசை திரும்பி விட்டது. முக்கியமாக ஜனனி எல்லாத்திலயும் முதல் இடத்தை பெற்று ஒரு சாதனை படைத்து காட்டும் பெண்ணாக வர வேண்டும் என்று கனவோடு இருந்தார். ஆனால் ஜனனியின் கனவுக்கு முதலில் குறுக்கே வந்தது நாச்சியப்பன் என்கிற ஜனனி அப்பா. நல்ல பணக்கார வீட்டு குடும்பம் வசதி வாய்ப்புடன் தேடி வந்ததால் ஜனனியை வலுக்கட்டாயமாக கட்டி வைத்து விட்டார்.

ஜனனியும் அப்பா பேச்சை மீறாமல் சரி என்று சொல்லியதால் தாலி கட்டிக் கொண்டார். ஆனால் அதன் பிறகு தான் அவருடைய நரக வாழ்க்கை அவருக்கே புரிய ஆரம்பித்தது. இருந்தாலும் அதிலிருந்து தப்பித்துப் போக வேண்டும் என்று முடிவு பண்ணிய ஜனனி யோசித்தது என்னவென்றால் அதே மாதிரி படித்துவிட்டு அந்த வீட்டில் அடுப்பாங்கரையில் இருக்கும் மூன்று அக்காக்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற விதத்தில் போராட்டத்தை தொடங்கினார்.

ஆனால் அந்த கதை பாதியிலேயே நிறுத்திய நிலையில் மறுபடியும் இப்பொழுது இரண்டாம் பாகம் என்று எதிர்நீச்சல் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு கதை போகவில்லை. இந்த சூழ்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் கதையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கொண்ட விஜய் டிவி அப்படியே கதையை பட்டி டிங்கிரி பார்த்து அய்யனார் துணை என்ற சீரியல் மூலம் கொண்டு வரப் போகிறார்கள்.

இதில் ஜனனி என்கிற மதுமிதா, நிலா கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கிறார். எப்படி ஜனனி எதிர்நீச்சல் சீரியலில் படிப்பில் கொடிகட்டி பறந்தாரோ, அதே மாதிரி அய்யனார் துணை சீரியலிலும் ஆர்க்கிடெக்கர் படித்து சாதனை படிக்கும் மாணவியாக விருதைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து அடுத்து மேல் படிப்பு படித்து அவருடைய லட்சியத்தை தொட வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் படித்தது போதும் மகளை அடுத்து கட்டிக் கொடுத்து விட வேண்டும் என்று ஆசைப்படும் அப்பாவின் பேச்சை கேட்டு நிலா ஒரு கல்யாணம் பண்ணுகிறார். அப்படி கல்யாணம் பண்ணப் போகிற குடும்பம் குழப்பவாதியாகவும் புரியாத புதிரான ஒரு குடும்பமாகவும் இருக்கிறது. இதில் சிக்கிக்கொண்ட நிலா எப்படி அவருடைய கனவை நிறைவேற்றுகிறார். அந்த குடும்பத்தை எப்படி சரி செய்கிறார் என்பதை காட்டும் விதமாக அய்யனார் துணை வரப்போகிறது.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் விட்டதை அய்யனார் துணையில் நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் விட்ட குறை தொட்ட குறையாக நிலா அவருடைய பயணத்தை தொடங்கப் போகிறார்.

Trending News