குணசேகரன் ஜெயிலில் இருந்து கொண்டே மொத்த குடும்பத்தையும் ஆட்சி செய்ய திட்டம் போட்டு வருகிறார். ஜெயிலில் கிடைத்துள்ள கூடா நட்பால் விபரீதமாய் தர்ஷன் கல்யாணத்தை முடிவு செய்துள்ளார். அவருக்கு பல மடங்கு கோடீஸ்வர பெண் என்றதும் ஆசை தலைக்கேறியது.
இப்பொழுது அந்தப் பெண் வீட்டில் இருந்து, மணப்பெண்ணோடு அக்காவும் அம்மாவும் குணசேகரன் வீட்டிற்கு வந்து மருமகளிடம் அடாவடி செய்து வருகிறார்கள். நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்து கரிகாலன் முதல் அனைவரையும் மிரட்டும் தோணியில் பேசுகிறார்கள்.
மருமகள்களை மதிக்காமல் நேராக குணசேகரனின் தாயார் விசாலாட்சி இடம் சென்று உங்கள் வீட்டிற்கு கோடீஸ்வரர் மகாலட்சுமி வர இருக்கிறாள் என தர்ஷன் கல்யாண விவரத்தை சொல்கிறார்கள். இதை கேட்ட விசாலாட்சி ஆடி போனார்.
தர்ஷன் சின்ன பையன் அவனுக்கு இப்பொழுது எதற்கு கல்யாணம் என கேட்ட விசாலாட்சி இடம், பொடி வைத்து பேசி அதிர்ச்சி அடைய செய்தனர். உங்களுடைய சம்மதம் மட்டும் இந்த வீட்டில் போதும், வேறு யாருடைய சம்மதமும் தேவையில்லை என தலையில் குண்டை தூக்கி போடுகிறார்கள்.
பரிதாபமாய் பயத்தில் தத்தளிக்கிறார் விசாலாட்சி. இதற்கிடையில் செல்போன் மூலம் குணசேகரன் ஜெயிலிலிருந்து அம்மாவிடம் பேசுகிறார். எல்லாம் சரிவரும் நீ பார்த்துக்கொள் எனவும் சமாதானப்படுத்துகிறார். விசாலாட்சி இடம் பெண் வீட்டார் நீங்கள் வந்து உங்கள் மருமகள்களுக்கு கூறுங்கள் என ஏற்றி விடுகிறார்கள். இப்படி நேற்றைய எபிசோட் அனல் பறந்தது .