Zee Tamil Serial: வெள்ளி திரையில் மட்டும் போட்டி இல்ல, சின்னத்திரையிலும் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு சேனல்களும் புதுப்புது நாடகங்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சீரியல் என்றால் சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறது. அடுத்தபடியாக விஜய் டிவியில் உள்ள சீரியல்களுக்கும் மக்களின் பேவரிட் சீரியலாக மாறிவிட்டது. இதனை தொடர்ந்து ஜீ தமிழ் சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்து மக்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் ஜீ தமிழில் இதயம், அண்ணா, வீரா, நினைத்தேன் வந்தாய், சந்தியா ராகம், கார்த்திகை தீபம் போன்ற அனைத்து சீரியல்களும் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று வருகிறது. அதிலும் அண்ணா சீரியலில் சண்முகத்தின் நடிப்பு எதார்த்தமாக இருப்பதால் மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து இருப்பது கார்த்திகை தீபம் சீரியல்.
நக்கல் மன்னனின் புதிய அத்தியாயம்
இந்த சீரியல் கிட்டத்தட்ட 500 எபிசோடு மேல் ஒளிபரப்பாகி வெற்றி பெற்று வருகிறது. இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்ப்பதற்கு முக்கியமான காரணம் ஆட்ட நாயகனாக வரும் கார்த்திக்கின் நடிப்புதான். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஆபீஸ் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார். இதில் கிடைத்த வரவேற்பை வைத்து ஜீ தமிழில் செம்பருத்தி என்ற நாடகத்தின் மூலம் என்டரி கொடுத்தார்.
இதன் மூலம் இரண்டாவது சீரியலாக கார்த்திகை தீபம் நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடைய மனைவியாக ஆர்த்திக்கா என்னும் தீபா நடித்து வருகிறார். தற்போது இவர்களுடைய கல்யாணத்தை முறித்துவிட்டு கார்த்திக்கின் மனைவியாக ரம்யா வரவேண்டும் என்பதற்காக பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் அந்த சூழ்ச்சி எல்லாம் கண்டுபிடித்து ரம்யாவின் முகத்திரையை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு காட்ட வேண்டும் என்று கார்த்திக் போராடி வருகிறார். இதில் ரம்யா கதாபாத்திரத்தில் வில்லியாக நுழைந்திருப்பவர் விஜய் டிவி சீரியலில் பாக்கியலட்சுமி நாடகத்தில் ராதிகா கேரக்டரில் நடித்தவர் தான். இவர் தான் தற்போது வில்லியாக கார்த்திகை தீபம் நாடகத்தில் நடித்த வருகிறார்.
இவரை தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல் சீரியலில் மிக பிரபலமாக இருந்த கரிகாலனும், கார்த்திகை தீபம் நாடகத்தில் என்டரி கொடுக்கப் போகிறார். இவருடைய நடிப்பு நிச்சயமாக இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமான புள்ளிகளை பெற்று டஃப் கொடுக்கப் போகிறது. இந்த சீரியல் தினமும் பிரேம் டைம் ஆன இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
- முக்கியமான சீரியலில் இருந்து விலகும் ஜி தமிழ் கதாநாயகன்
- ஆட்ட நாயகனாக ஜீ தமிழில் ஜொலிக்கும் விஜய் டிவி ஹீரோ
- ஆதியை அப்பாவாக ஏற்க மறுக்கும் தமிழ்