எதிர்நீச்சல் 2டில் ஜோசியக்காரர் சொன்னதிலிருந்து குணசேகரன் தரப்பு ஆட்டம் கண்டுள்ளது. வீட்டில் பெண்கள் இல்லை என்றால், அழிவுகள் நிறைய வரும் என கூறினார் ஜோசியர். இதனால் விசாலாட்சி மற்றும் குணசேகரன் இருவரும் பெண்களை வீட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்குகிறார்கள்.
வீடு தேடி சென்று மாமியார் விசாலாட்சி அம்மையார் அழைத்தும் கூட மருமகள்கள் வீட்டுக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற குணசேகரன் மோசமான வலையில் அவர்களை சிக்க வைக்க திட்டம் போட்டுள்ளார்.
குணசேகரன், தான் நிர்வாக கமிட்டியில் இருக்கும் கோயில் பெரியவர்களை அழைத்து சில்லறைத்தனமான ஒரு காரியத்தை செய்கிறார். கோயிலில் நடைபெற்ற மீட்டிங்கில், வீட்டுப் பெண்களை அடக்கத் தெரியாத நீங்கள் ஊருக்கு உபதேசம் செய்யக்கூடாது என கமிட்டியில் இருந்து குணசேகரனை நீக்கியதாக பேசுகிறார்கள்.
அந்த காட்சிகளை எல்லாம் மருமகள்கள் மறைந்து இருந்து கவனிக்கும்படியும் ஏற்கனவே குணசேகரன் வலை பின்னி விட்டார். அதற்கு ஏற்றார் போல் மருமகள்களும், நம்மால் நம் கணவர்களுக்கு இவ்வளவு கஷ்டமா என மூளை மழுங்கி நேற்றைய எபிசோடில் யோசிக்க வைத்து விட்டார். இதனால் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார்கள் என தெரிகிறது.
குணசேகரனின் இந்த வித்தையை அறியாத தம்பிகளும் மொத்த கோபத்தையும் பெண்கள் மீது காட்ட தயாராகி விட்டார்கள். இதுதான் குணசேகரனின் அல்டிமேட் பிளான். கோவில் கமிட்டியில் மூச்சுக்கு 300 தடவை அங்கே உள்ளவர்கள் பெண்களைப் பற்றித்தான் தரகுறைவாக பேசுகிறார்கள். இப்படி பேச வைத்ததே குணசேகரன் தான்.
Director thinks we are all fools. No women in real life will do like it’s happening.in serials.