சன்டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் சமூகத்தில் ஆண்களால் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்தும் குடும்பத்தில் நடக்கும் வன்முறைகளை கண்டித்தும் தற்பொழுது வரும் காலகட்டங்களில் பெண்களும் ஆண்களுக்கு நிகர் என நிரூபித்து எதிர்நீச்சல் போட தொடங்கியுள்ளனர் என்பதை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
குணசேகரன் குடும்பத்தில் ஒன்றாக இருந்த ஆண்களின் கூட்டணியானது சக்தியின் செயல்களால் இரண்டாகப் பிரிந்துள்ளது. சமூகத்தில் ஒரு மனிதனுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொண்ட சக்தி தற்பொழுது அதனை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக தனக்கு சொத்தில் எந்த பங்கும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேலையை தேடி சென்றுள்ளார். வேலைக்குச் சென்ற இடத்தில் ஜனனிக்கு நேர்ந்த இன்னல்களுக்கு எதிராக தனது கோபத்தினை வெளிப்படுத்தினார்.
பின்னர் சக்தி ஜனனியிடம் இதையெல்லாம் நீ எப்படி பொறுத்துக் கொள்கிறாய் உனக்கு கோபம் வரவில்லையா என்று கேட்கிறார். உடனே ஜனனி எனக்கு கோபம் வந்தது ஆனால் அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும். நீ என்னை காப்பாற்ற வரவில்லை என்றாலும் கூட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்னை எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என எனக்கு தெரியும் என்று கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து ஜனனி சக்தியிடம் நாம் இருவரும் கணவன் மனைவி என்பதை தாண்டி நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்று கூறுகிறார். பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்தே வீட்டிற்கு வருகின்றனர். ஜனனி சக்தியிடம் நீ முன்னாடி போ நான் பிறகு வருகிறேன் என்று கூறுகிறார். உடனே சக்தி ஏன் என்ன ஆயிற்று என்று கேட்கிறார். ஜனனி சக்தியை பார்த்த பார்வையிலே ஜனனி என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து முதலில் சக்தி மட்டும் வீட்டிற்குள் செல்கிறார். வீட்டில் குணசேகரனின் கூட்டணி பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது விசாலாட்சி சக்தியிடம் என்னப்பா நிஜமாகவே வேலைக்கு சேர்ந்துட்டியா என்ற கேள்வியை கேட்கிறார். உடனே சக்தியும் ஆமா என்ற பதிலை தருகிறார். உடனே கதிர் நக்கலாக வெளங்கிரும்டா என்ற கமெண்டை கொடுக்கிறார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு கோபம் தலைக்கேற விளங்குமா வெளங்காத என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ போய் ஊரை சுற்ற கிளம்பு என்ற பதிலடி யை கதிருக்கு திருப்பிக் கொடுக்கிறார்.
உடனே சக்தியின் பதிலடியால் கதிருக்கு கோபம் தலைக்கேறியது. கதிருக்கு மட்டுமல்லாமல் குணசேகரனுக்கும் சக்தி மேல் கோபம் அதிகமானது. இதனைத் தொடர்ந்து சக்தியின் பின்னால் ஜனனி வருவதை பார்த்த குணசேகரனுக்கு சக்தியின் மாற்றத்தின் செயல்களுக்கு ஓ இதெல்லாம் உன்னுடைய வேலை தானா என்று பார்ப்பது போல் இன்றைய ப்ரோமோ வானது வெளியாகி உள்ளது.
Also Read: 14 வயதில் திருமணம்.. நிஜ வாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போட்ட பட்டம்மாள்
இவ்வாறு குணசேகரன் குடும்பத்தில் உள்ள ஆண்களின் முரட்டுத்தனத்தையும் ஆண் என்ற கர்வத்தை அடக்குவதற்கு குடும்பத்தில் உள்ள மருமகள்கள் எதிர்நீச்சல் போடத் தொடங்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து குணசேகரன் கூட்டணி ரெண்டாக உடைந்து அதிலிருந்து சக்தியும் இவர்களுடன் கைகோர்க்க தொடங்கியுள்ளார். இனி குடும்பத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாத தினம் தினம் எதிர்பார்ப்பை தரக்கூடிய சீரியல் ஆக எதிர்நீச்சல் அமைந்துள்ளது.