செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

Ethirneechal Serial: சீரியலுக்கு பஞ்சமே இல்லாத வகையில் போட்டி போட்டுக் கொண்டு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் இன்னும் புது சேனல்களில் நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நாடகம் என்றால் அது எப்பொழுதுமே சன் டிவி தான் என்பதற்கு ஏற்ப முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி மொத்த சீரியலுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பது எதிர்நீச்சல்.

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு கதை நகர்ந்து வருகிறது. அதற்கேற்ற மாதிரி குணசேகரனுடைய அடாவடித்தனமான பேச்சு இந்த சீரியலுக்கு முக்கிய சிறப்பாக இருக்கிறது. மேலும் இவரிடம் இருந்து அந்த வீட்டில் அடிமையாக இருக்கும் மருமகள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக எதிர்த்துப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.

Also read: பக்கவாதம் வந்தாலும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் குணசேகரன்.. அடி முட்டாள்கள் என நிரூபிக்கும் தம்பிகள்

அந்த வகையில் ஈஸ்வரி, கல்லூரி சிறப்பு பேச்சாளராக பணிபுரிந்து அவருக்கான பாதையை அமைத்துக் கொண்டார். அடுத்த கட்டமாக நந்தினி சொந்தக்காலில் நிற்பதற்கு புது அவதாரம் எடுக்க போகிறார். அதாவது இவருடைய சமையல் நன்றாக இருக்கிறது என்று அனைவரும் பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் ஜனனி, நந்தினி சமைத்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு கொடுத்தார். அவர்களும் இந்த மாதிரி ஒரு சாப்பாட்டை நான் சாப்பிட்டதில்லே வாய்க்கு ருசியாக, நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். இதே வைத்து ஜனனி, நந்தினிக்கு ஒரு ஐடியா கொடுக்கப் போகிறார்.

Also read: மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

அதாவது பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா தனது சொந்த காலில் முன்னேறுவதற்காக அவருக்கு தெரிந்த சமையல் கலையை வைத்துக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுத்து முன்னேறி விட்டார். இவர் ஆரம்பத்தில் தெரிந்தவர்களுக்கு சமைத்துக் கொடுத்து அதன் மூலமாகவே தற்போது இந்த நிலைமைக்கு ஆகியிருக்கிறார்.

அதை போல் நந்தினியும் சமையல் செய்து இவருடைய முன்னேற்றத்திற்கு வழி வகுக்க போகிறார். ஆக மொத்தத்தில் இவருடைய ரூட்டும் கிளியர் ஆகப்போகுது. அடுத்ததாக ரேணுகா இவருக்கும் கூடிய விரைவில் வாய்ப்புகள் வந்துவிடும். அதன் பின் இவர்களை அண்டி பிழைக்கும் விதமாக தான் குணசேகரன் மற்றும் தம்பிகள் நிலைமை இருக்கப் போகிறது.

Also read: சொத்துக்காக செத்து செத்து விளையாடும் குணசேகரன்.. நந்தினி எடுக்க போகும் புது அவதாரம்

Trending News